நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?

நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
News Image

இந்தியாவின் அண்டை நாடாக பாகிஸ்தான் இருந்தாலும் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்திய விமானப்படை அதிகாரி சல்லாப புத்தியால் ராணுவ ரகசியங்களை கசியவிட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நிர்வாண புகைப்படங்கள்:

வாட்ஸ் அப் மூலமாக பழக்கமான அந்த பாகிஸ்தான் உளவாளி தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இந்திய விமானப்படை அதிகாரிக்கு அனுப்பி அவரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். அந்த பெண் அனுப்பும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் விமானப்படை அதிகாரி ராணுவத்தின் உயர்மட்ட ரகசியங்களை அவருக்குத் தெரிவித்து வந்துள்ளார்.

இந்தாண்டு ஜனவரி 12 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி அவர் அவர் பாகிஸ்தான் உளவாளிக்கு வாட்ஸ் அப் வாயிலாக இதை பகிர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி அவர் தன்னுடைய ஸ்மார்ட்போனில் ரகசிய தகவல்களை பதிவு செய்து கொண்டு திரும்பும்போது சிக்கிக் கொண்டுள்ளார். இந்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

ரகசியங்களை பகிர்ந்த இந்திய அதிகாரி:

பாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இந்திய அதிகாரி விமானப்படையில் விங் கமாண்டர் பதவியில் பொறுப்பு வகிப்பவர். பாகிஸ்தான் உளவாளியிடம் இருந்து கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிர்வாண புகைப்படத்திற்கும் அவர் விமானப்படையின் போர் வியூகங்கள், போர் தந்திரங்களை அவருக்கு அளித்துள்ளார். இது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்திய அதிகாரி பாகிஸ்தான் உளவாளிக்கு பகிர்ந்த ரகசியத்தில் விமானப்படையின் ட்ரோன்கள், அதன் பலம், அதன் வடிவம், அதன் செயல்பாடுகள், ஆயுதங்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட தகவல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி தகவல்:

அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது போலீசார் பிடியில் உள்ளார். இது மட்டுமின்றி லே-வில் போர் விமானங்களை நிறுத்துவது குறித்த முக்கிய தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த அதிகாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவலும் வெளியாகியது. பாகிஸ்தான் உளவாளி அனுப்பிய உளவுபார்க்கும் செயலி ஒன்றையும் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் இவர் பொருத்தியுள்ளார். இது அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தீவிர விசாரணை:

அவருக்கும் அந்த பாகிஸ்தான் உளவாளிக்கும் இடையே 3 ஆயிரத்து 8 குறுஞ்செய்திகள், 65 புகைப்படங்கள், 65 ரியாக்ஷன்ஸ், 42 வாய்ஸ் கால், 4 வீடியோ கால் மற்றும் 6 லிங்குகள் பகிரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் இதேபோன்று பாகிஸ்தான் உளவாளிக்கு ஆபாச படங்களுக்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. தற்போது அதேபோல, மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்களை அறிந்து கொள்ள பாகிஸ்தான் உளவாளிகள் ஆபாசத்தை புதிய ஆயுதமாக கையில் எடுத்து வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks