"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!

"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
News Image

கோவை பெரியார் அறிவுலக புத்தகக்கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் தவெக அரசு விசாரணை ஆணையம் அமைக்காதது ஏன்? என திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

"விசாரணை ஆணையம் அமைக்காதது ஏன்?"

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன், பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கென முறைப்படி உயர்மட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றதாக தெரிவித்தார். அப்போதைய திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டும் தவெக அரசு, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட தேதியை வெளியிடாதது ஏன் எனவும், ஆட்சி அதிகாரத்தில் இருந்துக்கொண்டு விசாரணை ஆணையம் அமைக்காமல், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை"

மேலும், பெரியார் அறிவுலகத்தில் சர்ச்சைக்குள்ளான புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அதிருப்தி தெரிவித்த புத்தகங்கள் அனைத்தும், ஜூன் மாதத்தில் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது எனவும் பரந்தாமன் விமர்சித்தார்.மேலும், 'த்ரிஷா விஜய்' எனும் பெயர் கொண்ட எழுத்தாளரின் புத்தகங்களையெல்லாம் திமுக அரசு ஏன் கொள்முதல் செய்யவேண்டுமென கேள்வி எழுப்பிய அவர், இவ்விவகாரத்தில் திமுக மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பது ஒன்றே தவெக அரசின் நோக்கம் எனவும் சாடினார்.

அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு திமுக பதிலடி

சென்னையில் நேற்று நடைபெற்ற தொழில் முனைவோருக்குக்கான வங்கி இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மக்கள் வரிப்பணத்தில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்ட நிலையில் ஏதோ தங்கள் சொந்தப்பணத்தில் கட்டியதுபோல் திமுகவினர் பெருமை பேசுவதாக விமர்சித்தார். மேலும் பெரியாரை கொள்கை தலைவராக கூறிக்கொள்ளும் திமுக, அவரது பெயரிலான அறிவுலகத்திலேயே ஊழல் செய்துள்ளதாகவும், ஊழல் செய்வதற்காகவே போலி பதிப்பகத்தின் பெயரில் புத்தகங்களை வாங்கியதாகவும் அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லையெனவும், திமுகவின் மெகா ஊழலுக்கு இது ஒரு சான்று எனவும் விமர்சித்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகனின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன் பேட்டியளித்தார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks