சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?

சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
News Image

புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூ. 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித தலங்களின் விவரம்

புத்த மதத்தினருக்கு  பீகாரில் உள்ள புத்த கயா,  உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர்,வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், பீகாரில் உள்ள ராஜ்கிர் வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சமண மதத்தினருக்கான பட்டியலில் இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில்,  ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சரவணபெலகோலா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், சீக்கிய மதத்தினருக்கு பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப்,பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்களும், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல் மற்றும் குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் ஆகியவற்றிற்கும் இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்  அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெற முடியும். மேலும் விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அர்சு தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks