தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கணக்கான மக்கள் சொந்த் ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் நாளை முதல் விடுமுறை என்பதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும்.

5 இடங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள்

ஒரே இடத்தில் பேருந்துப்பயணத்துக்காக பயணிகள் குவிவதை தடுக்கும் நோக்கில் 5 இடங்களில் இருந்து பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருகிறது. தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எந்த ஊருக்கு எங்கே பஸ்?

இதன்படி சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக கடலூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலும், செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, வந்தவாசி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் CMDA காலநிலை பூங்காவிலும்,
தஞ்சாவூர்,கும்பகோணம், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் மறைமலை நகர் நகராட்சி திடலில் இருந்தும், ECR வழியாக நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, தருமபுரி, வேலூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலும்,பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை வழியாக சேலம், திருச்சி மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. மேலும், கிண்டி, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட 16 முக்கிய இடங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகளை பேருந்துகள் நேரடியாக ஏற்றிச் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள் தீபாவளி விடுமுறை முடித்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article