"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!

"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
News Image

கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த விவகாரத்தில் திமுக-விற்கு எதிராக தவெக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்:

இந்த விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு விவகாரம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரேஸ். பெல்ஜியத்தில் பிறந்த இவர் இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரம், இங்கு நிலவும் பசி, பட்டினி, கல்வி, வாழும் சூழல் என பலவை குறித்து ஆய்வு செய்து வரும் மூத்த பொருளாதார நிபுணர்.

இவர் எழுதியதாக கூறி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சமகால உலகில் மக்களாட்சியும் மக்களின் உரிமைகளும் என்ற பெயரில் புத்தகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை என்று ஜுன் டிரேஸ் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

எழுதவே இல்லை:

இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளதாவது, 'Democracy and People’s Rights in the Contemporary World' (சமகால உலகில் மக்களாட்சியும் மக்களின் உரிமைகளும்) என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்று,

எனது பெயரில் தமிழ்நாட்டின் சில பொது நூலகங்களில் இடம்பெற்றுள்ளதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து நான் மிகுந்த குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இத்தகைய புத்தகம் எனது பெயரில் இருந்தால், அது நிச்சயமாகப் போலியானதே; ஏனெனில், நான் இது போன்ற எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை.

கடும் நடவடிக்கை தேவை:

இந்தத் தவறான போக்கு மேலும் பரவுவதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்; குறிப்பாக, இந்தப் புத்தகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருந்தால், அது இன்னும் தீவிரமான விஷயமாகும். ஒரு பொது நூலகம் இத்தகைய புத்தகத்தை எப்படிப் பெற முடிந்தது? புத்தகத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருந்திருக்க முடியாது.

இந்த போலியான புத்தகத்தை வெளியிட்டவர்கள் மற்றும் மற்ற குற்றவாளிகள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த புத்தகம் என்பது போலியான புத்தகம் குறித்து வெளியான பற்றியது மட்டுமின்றி இது எப்படி அரசு நூலகங்களில் விநியோகிக்கப்பட்டது என்பதும் ஆகும். இந்த புத்தகத்தின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது அவ்வளவு கடினமாக அரசுக்கு இருந்திருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி:

ஜுன் டிரேஸ் பெயரில் வெளியாகியுள்ள அந்த போலி புத்தகம் கடந்த 2023ம் ஆண்டு ஜுன் 25ம் தேதி கொள்முதல் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த புத்தகம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயராலே வெளியாகியுள்ளது.

வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர் பெயரிலே போலி புத்தகம் வெளியாகியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களில் பல போலி புத்தகங்கள் இருக்கலாம் என்றும் அந்த புத்தகங்களின் நம்பகத்தன்மை குறித்து கண்டறிய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks