கார்த்திகை பிறப்பு எதிரொலி; ஐயப்ப பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்! கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

கார்த்திகை பிறப்பு எதிரொலி; ஐயப்ப பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்! கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
News Image

தஞ்சாவூர்:  கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை  நகர்களில் ஐயப்ப பக்தர்களுக்கான பூஜை மற்றும் விரதப் பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து விரதம் தொடங்கத் தயாராகும் பக்தர்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.  இதனால் நகரின் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர்  மாவட்டத்திலும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்நாளில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வதற்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்குவதில் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இதன் காரணமாக தஞ்சாவூர் கீழ அலங்கம், தெற்கு வீதி, அரியலூர் மார்க்கெட் தெரு, திருச்சி சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஐயப்ப பக்தர்களுக்கான பொருட்கள் பிரத்யேகமாக விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விரத காலத்தில் அணியும் கருப்பு மற்றும் நீல நிற வேட்டிகள், துண்டுகள், துளசி மாலைகள், ருத்ராட்ச மாலைகள், முத்துமணி மாலைகள் எனப் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் மாலைகள் கிடைப்பதால் கடைகளில் அவற்றைத் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், ஐயப்பன் உருவப்படம் பதிக்கப்பட்ட டாலர்கள், ஊதுபத்தி, சூடம், சந்தனம், குங்குமம், ஜவ்வாது, விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. வீடுகளில் நடைபெறும் வழிபாடுகளுக்கும், கோவில்களில் மாலை அணியும் நிகழ்ச்சிகளுக்கும் தேவையான பொருட்களை பக்தர்கள் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் கடைகளில் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாலைகளின் விலையைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான மாலைகள் ரூ.120 முதல் ரூ.300 வரையிலும், சிறிய அளவிலான மாலைகள் ரூ.50 முதல் ரூ.140 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், தரம் மற்றும் வகைக்கு ஏற்ப கருப்பு, நீல நிற வேட்டிகள் ரூ.180 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பூஜைப் பொருட்களின் விலையும் அவற்றின் வகை மற்றும் அளவுக்கு ஏற்ப மாறுபடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் அதிகாலையிலேயே கோவில்களுக்குச் சென்று குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தைத் பல பக்தர்கள் தொடங்கினர். இதனால், மாலை அணிவதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தஞ்சாவூர், அரியலூர் பகுதிகளில் நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் கடைகளுக்கு வந்தனர்.

அதிகாலையில் தொடங்கிய இந்த விற்பனை ஆர்வம் பகல் முழுவதும் நீடித்ததுடன், இரவு நேரங்களிலும் குடும்பத்தினருடன் வந்த பக்தர்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதனால் முக்கிய கடைவீதிகளில் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. குறிப்பாக, மாலைகள் மற்றும் கருப்பு, நீல நிற ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐயப்ப விரதப் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். கார்த்திகை மாதப் பிறப்பால் ஐயப்ப பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தில் களைகட்டியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks