பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக

பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
News Image

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திமுக புகார் மனு

கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று அமைச்சர் ராஜ்மோகன் புகார் அளித்திருந்த நிலையில் இன்று திமுக சார்பில் முன்னாள் எம்எம்ஏ பரந்தாமன் புகார் அளித்துள்ளார்.

1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?

2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?

3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?

4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த
அதிகாரிகள் யார்?

5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?

6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?

7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?

8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? என பல்வேறு கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்தான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக அரசும், கடந்த ஆட்சியை ஆண்ட திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றது. இரண்டு கட்சிகளும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலிறுத்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks