சோத்துப்பாறை அணையில் தவெகவினர் அட்டகாசம்? தமிழக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

சோத்துப்பாறை அணையில் தவெகவினர் அட்டகாசம்? தமிழக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!
News Image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அதிகாரிகளுக்குத் தெரியாமல் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு அதனை ரீல்ஸாகப் பதிவு செய்து வெளியிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள சோத்துப்பாறை அணைக்குள் அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் சட்டவிரோதமாக நுழைந்து, அதிகாரிகளுக்குத் தெரியாமல் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு அதனை வீடியோவாகப் பதிவு செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டிய அணைகளுக்குள் ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக நுழைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

அணைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சூழ்நிலைக்கு ஏற்ப உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அணைகளில் இருந்து அளவுக்கு அதிகமாகவோ, உரிய முன்னெச்சரிக்கை இன்றியோ தண்ணீர் திறக்கப்பட்டால் பெரும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டதால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல், 2025-ஆம் ஆண்டு சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், எந்தவிதக் கவலையும் இன்றி சோத்துப்பாறை அணையை தவெகவினர் எவ்வாறு திறந்தனர்? அவர்கள் அணையைத் திறக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அணையின் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

காவல் நிலையம், மருத்துவமனைகளில் நள்ளிரவில் ஆய்வு செய்வது, புலியைத் துரத்துவது, அணையைத் திறப்பது என அமைச்சர்கள் முதல் கட்சித் தொண்டர்கள் வரை தங்களது விருப்பம்போல் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

எனவே, சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தண்ணீரைத் திறந்துவிட்ட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks