தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி நிஷாந்த் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார்.

நிஷாந்தை மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் இன்று தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியில் அதியமான்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை தனிப்படை காவல்துறையினர் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து நிஷாந்தை மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நிஷாந்திடம் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

நகைகளை பதுக்கி வைத்த இடங்கள் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

நகைகள் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறித்தும் நகைகளை பதுக்கி வைத்த இடங்கள் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் நகையை கொள்ளையடிப்பதற்கான திட்டம் எவ்வாறு நடைபெற்றது எங்கு தலைமறைவாக இருந்தார், யார் யாரிடம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்தில் நிஷாந்தை அழைத்துச் சென்று நகைகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர்.

தங்க நகை மூடையினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரத்தில் நிஷாந்த் பதுக்கிவைத்திருந்த தங்க நகை மூடையினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நகையை மதிப்பீடு செய்வதற்காக தற்போது நகை அளவிடும் இயந்திரங்கள் தற்போது காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொள்ளையடித்த நிஷாந்திடம் இருந்து 6 கிலோ 200 கிராம் நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர். தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 11கிலோ 700 கிராம் வரை மீட்கப்பட்டதாக தகவல். தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். நகையை மதிப்பீடு செய்வதற்காக தற்போது நகை அளவிடும் இயந்திரங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Source: Read Full Article