மகளுடன் பழகுவதை நிறுத்தச் சொல்லியும் கேட்கவில்லை... ஆத்திரத்தில் வாலிபரைத் தீர்த்துக்கட்டிய தந்தை!

மகளுடன் பழகுவதை நிறுத்தச் சொல்லியும் கேட்கவில்லை... ஆத்திரத்தில் வாலிபரைத் தீர்த்துக்கட்டிய தந்தை!
News Image

சென்னை : சென்னை பெரம்பூரை அடுத்த செம்பியத்தில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாகப் பெண்ணின் தந்தையை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூரை அடுத்துள்ள செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்குத் திருமணமாகி ஷர்மிளா என்ற மனைவி உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கும் ரமேஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்த நிலையில்  அப்பெண்ணின் தந்தையான பாபு என்பவர் ரமேஷை பலமுறை அழைத்து தனது மகளுடன் பழகக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆனால் அதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ரமேஷ் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாபு அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தனது திட்டத்தின்படி நேற்று பெரம்பூர் சக்கரபாணி தோட்டம் பகுதியில் உள்ள ரமேஷின் வீட்டிற்கு பாபு சென்றுள்ளார்.

அங்கு ரமேஷிடம் தன் பெண்ணுடனான தொடர்பைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். அதற்கு ரமேஷ் செவிசாய்க்காததால், ஆத்திரமடைந்த பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த செம்பியம் காவல் துறையினர்  உயிரிழந்த ரமேஷின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், உயிரிழந்த ரமேஷ் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும், கடந்த ஜனவரி மாதம் வரை சிறையில் இருந்துவிட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்ததும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் ரமேஷின் மனைவி ஷர்மிளா, கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்து அவரைக் கண்டித்ததாகவும், ஆனாலும் ரமேஷ் அந்தத் தொடர்பைத் தொடர்ந்ததால் கணவரைப் பிரிந்து தனது தாயார் வீட்டிற்குச் சென்றதும் தெரிய வந்தது. இதற்கிடையில் ரமேஷை கொலை செய்த பாபுவை செம்பியம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக ரமேஷை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் பெண்ணின் தந்தை பாபு (53) என்பவரைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks