டக்கார் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீ ஃப்ரீஸ்டைல் போட்டியில் 56.27 வினாடிகளில் இலக்கை அடைந்து தேசிய அளவிலான சாதனை பதிவுடன் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் நீச்சல் வீராங்கனை பதினாறு வயதான தினிதி தேசிங்கு.

பெங்களூருவைச் சேர்ந்த இந்த இளம் நீச்சல் வீராங்கனைக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனம், தினிதியின் இந்த வெற்றியை ஒட்டுமொத்த தேசத்திற்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகப் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் முதல் டக்கார் மேடை வரை

ஒரு காலத்தில் தண்ணீரைத் கண்டு பயந்த தினிதி, இன்று அயராத உழைப்பின் மூலம் இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். தனது பதினான்காவது வயதில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியக் குழுவின் மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் இவர். டக்காரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், குரோஷியாவின் அனா போபனோவிக் மற்றும் நியூசிலாந்தின் அலிசா லாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலக்கை அடைந்து புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், யூத் ஒலிம்பிக் நீச்சல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற மற்றொரு வரலாற்று சாதனையும் இந்நிகழ்வின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

வீராங்கனைக்கு தொடர் ஆதரவு

இந்தியாவின் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் அடுத்த தலைமுறையை உருவாக்கிட வேண்டும் என்ற நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, தினிதி பதக்கம் வெல்வதற்குப் பல மாதங்களுக்கு முன்னதாகவே அவருக்கான தனது ஆதரவை பஜாஜ் ஃபின்செர்வ் அறிவித்திருந்தது.

வழக்கமான ஸ்பான்சர்ஷிப் எனப்படும் நிதியுதவியைத் தாண்டி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, போட்டி அனுபவங்கள், உயர்தர உபகரணங்கள் மற்றும் முறையான உடற்தகுதி ஆகிய அனைத்து அம்சங்களிலும் இந்நிறுவனம் அவருக்கு முழுமையான பக்கபலமாக விளங்கி வருகிறது. விளையாட்டுத் திறமை மேலாண்மை நிறுவனமான பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தச் சிறப்பான இணைப்பைச் சாத்தியமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமிதம் பொங்கும் பாராட்டு

பஜாஜ் ஃபின்செர்வ் லிமிடெட்டின் குழுமத் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியும், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் டிஜிட்டல் தளங்களின் தலைவருமான மனவ் மியான்வால் தினிதியின் வெற்றியைக் குறித்துப் பேசுகையில், தினிதியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் தருணம் என்றும், பெரிய கனவுகளைக் காணத் துணியும் ஒவ்வொரு இளம் தடகள வீரருக்கும் இது சிறந்த உத்வேகமளிக்கும் நிகழ்வு என்றும் குறிப்பிட்டார். இந்தப் பதக்கத்தின் பின்னணியில் பல ஆண்டுகால கடின உழைப்பு, தியாகம் மற்றும் அசாதாரணமான உறுதிப்பாடு ஆகியவை உள்ளதாகவும், தனிப்பட்ட நபரின் திறமையுடன் கூட்டு ஆதரவு இணையும் போது இந்திய வீரர்களால் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதை தினிதி நிரூபித்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கம்

ஒவ்வொரு பதக்கத்தின் பின்னாலும் ஒரு தனிநபரின் மன உறுதியும், அந்த வீரருக்காகத் தினமும் துணை நிற்கும் மக்களின் கூட்டு ஆதரவும் உள்ளது என்பதைப் பஜாஜ் ஃபின்செர்வ் தனது செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து உணர்த்தி வருகிறது. இந்தியாவில் சில குறிப்பிட்ட விளையாட்டுகள் மட்டுமே அதிக கவனத்தையும் வளங்களையும் ஈர்க்கும் நிலையில், பல திறமையான இளம் வீரர்களுக்குத் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தத் தேவையான சூழல் அமைவதில்லை. விளையாட்டு வீரர்களின் ஆரம்பக் கட்டத்திலேயே அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம், அவர்களது குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைத்து, வீரர்கள் தங்களது திறனை மேம்படுத்துவதில் முழுமையாகக் கவனம் செலுத்த இந்நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது.

அடுத்த தலைமுறை சாம்பியன்களுக்கான தொடர் உதவி

இந்திய விளையாட்டுத் துறையில் அடுத்த தலைமுறை சாம்பியன்களை உருவாக்குவதற்காக, நீச்சல், பேட்மிண்டன் மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்குப் பஜாஜ் ஃபின்செர்வ் தொடர் ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம் ஆதரிக்கத் திட்டமிட்டுள்ள பல நீச்சல் வீரர்களில் தினிதி முதலாமவர் ஆவார். மேலும், வளர்ந்து வரும் பல இளம் பேட்மிண்டன் வீரர்களுக்கும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடனான கூட்டணியின் மூலம் தியா ரமேஷ், தீப்ஷிகா விநாயகமூர்த்தி, சவிதா புவனேஸ்வரன் மற்றும் ஸ்ரீ சைலேஸ்வரி வேல்மணிகண்டன் உள்ளிட்ட நான்கு சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கும் நிறுவனம் தனது ஆதரவை வழங்கி வருகிறது.

புதிய பாரதத்தின் வெற்றிக் கொடி

இளம் வீரர்களுக்குத் தரமான பயிற்சி, மேம்பட்ட பயிற்சிக்கான வசதிகள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள், விளையாட்டு உபகரணங்கள், ஊட்டச்சத்து மற்றும் உடற்தகுதி ஆதரவு, அத்துடன் பயணம் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகிய அனைத்தையும் பெற்றுத் தருவதே பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். திறமை, விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான கூட்டு ஆதரவு ஆகியவை ஒன்றிணையும் போது மிகப்பெரிய வெற்றிகளைச் சாதனைகளாக மாற்ற முடியும் என்பதற்கு தினிதியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம் மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article