திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்று சமூகத்தினருக்கு சுடுகாடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்ப அட்டையை தூக்கிப்போட்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் குனிச்சி பகுதியில் கிராமசப கூட்டம் துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆணிகிரேஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதாகவும் அதில் மூன்று ஏக்கர் நிலத்தில் வெளியூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சுடுகாடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த உள்ளூர் பொதுமக்கள் எந்த ஒரு தீர்மானமும் போடாமல், எப்படி வெளியூர் மாற்று சமூகத்தினருக்கு சுடுகாடு ஒதுக்குனீங்க எனக்கூறி இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

மேலும், அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைக்கப்பெறாத காரணத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுடைய குடும்ப அட்டையை கிராம நிர்வாக அலுவலரின் காலடி போட்டுவிட்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.பின்னர், திடீர் என சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும், மாற்று சமூகத்தினருக்கு இப்பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் சுடுகாடு ஒதுக்கி கொடுத்தால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம், தங்களுடைய ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Source: Read Full Article