மாநகரின் தூய்மையையும், அழகையும் பேணும் வகையில், பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் இத்தடையைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலோசனைக்கூட்டத்தின் முடிவு

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு முழுமையான தடைவிதிப்பு - மீறினால் சுவரொட்டிகளை அச்சிடும் அச்சகங்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - மதுரை விளம்பர பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் மதுரை மாநகராட்சி அறிவிப்பு.

சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை

மதுரை பலவற்றிற்கு பெயர் பெற்றிருந்தாலும் மதுரையில் ஒட்டப்படும் அரசியல் போஸ்டர்கள் , பிறந்தநாள் போஸ்டர்கள், ரசிகர்கள் சுவரொட்டிகள், விழா காலங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு தனி கவனம் கிடைக்கும். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சி போஸ்டர் கலாச்சாரத்தால் பல ஆண்டுகளாகவே அல்லல் பட்டு வருகிறது. போஸ்டர்களுக்கு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகின்ற நிலையில், மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், அறிவுறுத்தலின்படி, துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் தலைமையில், மதுரை விளம்பர பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகரின் தூய்மையையும், அழகையும் பாதுகாத்திடும் வகையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று மதுரை விளம்பரப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் சுவர்கள். கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து சங்க உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.

தடையைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள், சுவரொட்டிகளை அச்சிடும் அச்சகங்கள் மற்றும் இதில் தொடர்புடைய பிறர் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (உருக்குலைப்புத் தடுப்பு) சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரின் தூய்மையையும், அழகையும் பேணும் வகையில், பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் இத்தடையைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source: Read Full Article