மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!

மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
News Image

இந்த மலை இயற்கையான நீர்ப்பிடிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. மலையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சார்ந்தே அப்பகுதி கிராமங்கள் உள்ளன.

ஓணான் கரடு எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்று உள்ளது.

மதுரை பேரையூர் அருகே உள்ள பழமையான எச்சங்களை கொண்ட ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல்பாட்டுக்கு தடை கோரி வழக்கு. அரசு தரப்பில் அகழாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவு. அதுவரை 2 வாரங்களுக்கு மலையை உடைக்கவோ, தகர்த்தவோ கூடாது என இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைப்பு. நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பெத்தணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு. நான் இந்திய ராணுவத்தின் முன்னாள் படைவீரர். பேரையூர் தாலுகா எஸ்.பாப்பிநாயக் கன்பட்டி, சங்கரலிங்கபுரம் கிராமங்களுக்கு அருகில், சலுப்பென் கரடு, ஓணான் கரடு மற்றும் பெருமாள் மலை ஆகிய அமைந்துள்ளது. இதில், ஓணான் கரடு எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்று உள்ளது.

மலையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சார்ந்தே அப்பகுதி கிராமங்கள் உள்ளன.

இந்த மலை பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்களையும், புதைக்கும் முறைகளையும் சுட்டிக்காட்டும் பல தொல் பொருள், வரலாற்று, பண் பாட்டு எச்சங்களை கொண்ட இப்பகுதி குறிப்பிடத்தக்கது. எனவே, இயற்கை முக்கியத்துவம் வாய்ந்து இருக்கிறது. இந்த மலை இயற்கையான நீர்ப்பிடிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. மலையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சார்ந்தே அப்பகுதி கிராமங்கள் உள்ளன.

ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்

இப்பகுதியில் பழங்கால கட்டுமானங்கள், கல் எச்சங்கள், பழங்கால உருக்கு உலை, முதுமக்கள் தாழிகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், குறியீடுகள் மற்றும் பிற தொல்லியல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால எச்சங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவை சுமார் 2,000 முதல் 3,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த மலையில் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டால் பழமையான எச்சங்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே, தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதும், பல்லுயிர் வளத்தை கொண்டு இருக்கும். ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேல்முருகன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், அரசு தரப்பில் அகழாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து அதுவரை மலையை உடைக்கவோ அல்லது தகர்த்தவோ கூடாது. எனக்கூறி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks