அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு பின்னடைவு, ஜனநாயகக் கட்சிக்கு எழுச்சி!

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு பின்னடைவு, ஜனநாயகக் கட்சிக்கு எழுச்சி!
News Image

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியே சிறிய பெரும்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்க நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நிறைவடைந்த மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் வெளியானதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது.  டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றினால், அதிபர் டிரம்பின் எஞ்சிய 2 ஆண்டுப் பதவிக் காலத்தில் புதிய சட்டங்கள், நிர்வாக முடிவுகளில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளிகள் வெற்றி

இதனிடையே ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்று, கடந்த 2010ம் ஆண்டு முதல் குடியரசுக் கட்சியின் வசம் இருந்து வந்த ஒஹாயோ மாநிலத்தை கைப்பற்றினார். இதேபோல புளோரிடா மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 22வது தொகுதியில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான பியா தாண்டியா 51 புள்ளி 9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவு, ஜனநாயக கட்சி முன்னிலை, விவேக் ராமசாமி தோல்வி, பியா தாண்டியா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks