சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16-த்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியும் நடைபெற உள்ளன. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிரசாதங்கள் வாங்கி செல்வர்.

அவ்வாறு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுமைகளை அதிகமாக தூக்கி செல்வது போல் சிரமப்பட்ட நிலையில், சபரிமலை ஐயப்பனைத் தரிசித்துவிட்டு வீடு திரும்பும்போது அரவணை, அப்பம் உள்ளிட்ட பிரசாதங்களைச் சுமந்து செல்ல வேண்டிய சிரமம் இனி குறையவுள்ளது. பக்தர்கள் கோயில் வளாகத்திலிருந்தே பிரசாதங்களைத் தங்களது வீட்டு முகவரிக்கு அனுப்பும் புதிய வசதியைத் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் இந்திய அஞ்சல் துறையும் இணைந்து அறிமுகப்படுத்துகின்றன.

இந்தியா போஸ்டின் விரைவு அஞ்சல் பார்சல் சேவை மூலம் செயல்படுத்தப்படும் இந்த வசதி அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. இதற்காகக் கோயில் வளாகத்தில் அரவணை, அப்பம் விற்பனை செய்யும் கவுன்ட்டர்களுடன் சிறப்புப் பார்சல் பதிவு மையமும் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் விரும்பும் அளவுக்குப் பிரசாதப் பார்சல்களை முன்பதிவு செய்து அனுப்பலாம்.

பதிவு செய்யப்பட்ட பார்சல்கள் பக்தர்கள் யாத்திரையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்குள் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் முன்பதிவு செய்து சபரிமலைப் பிரசாதங்களைப் பெறும் வசதியும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். சபரிமலையின் முக்கியப் பிரசாதங்களான அரவணை பாயசம், அரிசி, சர்க்கரை, நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அப்பமும் பக்தர்களால் விரும்பி வாங்கப்படும் பிரசாதமாகும். இவற்றைப் பயணத்தின்போது எடுத்துச் செல்வதில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதே புதிய சேவையின் நோக்கமாகும். இதற்கிடையே, சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜைக் காலம் நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ஆம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் மண்டல பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் இணையவழி மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தினமும் அதிகபட்சம் 80,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Source: Read Full Article