திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!

திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
News Image

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை யாகசாலையில் நடைபெறும் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் அவர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருநாளான 16-ந்தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று காலை முதலே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குவியத்தொடங்கினர். அவர்கள் தங்குவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டல இயக்குநர் செல்வம், “திருச்செந்தூர், கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்களும் மதுரை, நெல்லை, கோவில்பட்டி, பாபநாசம், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, திசையன்விளை, ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து 305 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகையைப் பொறுத்து எண்ணிக்கை மேலும் கூடுதலாக பேருந்துகள் இயக்கிடவும் தயார் நிலையில் போக்குவரத்துக் கழகம் உள்ளது.” என்றார்.  இதே போல தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சார்பில், வரும் 15-ம் தேதி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நெல்லையில் இருந்து 03.20 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து மறுமார்க்கமாக அன்று மாலை இரவு 07.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks