"அரோகரா கோஷம் சர்ச்சை"

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் முருகப் பெருமானுக்கு பதிலாக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.

திருச்செந்தூர் வரலாற்றில் இதுவரை இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் , இதனை ஆணவத்தின் உச்சம் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் இதுகுறித்து பேசுகையில் ,

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது , முருகனுக்குச் சரணம் என்ற பொருளில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்புவது காலங்காலமாக இருந்து வரும் மரபாகும். ஆனால் , இந்த ஆண்டு தாவேக ஆட்சியில் முதலமைச்சருக்கு அரோகரா , அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா எனக் கோஷம் எழுப்பப்பட்டு புதிய கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனது 55 வயது வாழ்க்கையில் திருச்செந்தூர் சரித்திரத்தில் இது போன்றதொரு கோஷம் எழுப்பப்பட்டதைக் கண்டதே இல்லை. இறைவனுக்குச் சமமாகத் தங்களது கட்சித் தலைவரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுப் பேசுவது அபத்தமான செயல்.

"தங்கள் கட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம்"

ஆறு நாட்கள் கடுமையாக விரதம் இருந்து , கோயிலின் ஒவ்வொரு தூணிலும் இடம் பிடித்து, சூரசம்ஹாரம் முடிந்த பின்னரே உணவு உட்கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை இந்தச் செயல் புண்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களுக்குப் போதிய அனுமதி சீட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் நடக்க முடியாத 75 வயது முதியவர்கள் உட்பட ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பலரால் கோயிலுக்குள் நுழையக் கூட முடியவில்லை. தமிழிசை கூட உள்ளே செல்ல முடியாத நிலையில் , ஆளுங்கட்சியினரும் அறநிலையத்துறை அமைச்சரும் மட்டுமே உள்ளே சென்று தங்களது கட்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

பக்தர்களுக்கு ஒரு துளி மரியாதை கூட வழங்கப்படாத இந்தச் செயலால் பக்தர்கள் அனைவரும் முகம் சுளித்து கடும் கோபத்தில் உள்ளனர். திமுக எப்போதும் அனைத்து மத உணர்வுகளையும் மதிக்கும் கட்சி. மதவெறி கொள்ள க்கூடாது என்பதையே வலியுறுத்துகிறது. சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article