மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்! ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!

மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்! ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!
News Image

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் கொல்லம் இடையே 2 மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே  நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக வருகின்ற நவம்பர் 17 அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜை வரை 2 மாத காலத்துக்கு பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும்.

இந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் ரயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற நவம்பர் 21 முதல் ஜன. 23 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் (06121) சென்னை எழும்பூரிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுபுறம் நவம்பர் 22 முதல் ஜனவரி 24 வரை இயக்கப்படும் ரயில் (06122) கொல்லத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, ஈரோடு, போத்தனூர், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது.

குறிப்பக சபரிமலை சீசனின் முக்கிய நிகழ்வுகளான மண்டல பூஜை டிசம்பர் 27-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தகவல்களையும் பெறும் வகையில் புது இணையதளத்தை ஆலய நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

sabariportaldcpta.in என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதன்மூலம் கோயில் நிகழ்வுகளை அறியவும், தரிசனத்துக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளவும், ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அறியவும், பொருட்கள் திருட்டு மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து புகாரளிக்கவும் முடியுமென ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இப்புதிய இணையதளத்தில் வாட்ஸ் ஆப் சார்ட் போர்டு வசதியும் உள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு கேரள அரசு, தேவசம் போர்டு இணைந்து பல்வேறு  ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks