மண்டல பூஜை முதல் விஷு வரை.. சபரிமலையில் எந்தெந்த நாட்களில் நடை திறப்பு?

மண்டல பூஜை முதல் விஷு வரை.. சபரிமலையில் எந்தெந்த நாட்களில் நடை திறப்பு?
News Image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் முதல் 2027-ம் ஆண்டின் மண்டல சீசன் வரையில் நடை திறக்கப்படும் நாட்கள், சிறப்பு பூஜை குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தந்திரி முன்னிலையில்மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள்.

மறுநாள் 17-ந் தேதி (கார்த்திகை 1-ந் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகளை நிறைவேற்றுவார்கள். நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி நடை திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடை பெறும். மேலும் 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் சீசன் நிறைவு பெறும்

பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சிறப்பு பூஜை நடைபெறும். முன்னதாக பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12-ந் தேதி நடை திறக்கப்படும். 13-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். 22-ந் தேதி ஆராட்டுடன் 10 நாட்கள் விழா நிறைவு பெறும்.

சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10-ந் தேதி நடை திறக்கப்படும். 15-ந் தேதி விஷு பண்டிகைக்காக சிறப்பு பூஜை நடைபெறும். இதனை தொடர்ந்து 19ந் தேதி நடை அடைக்கப்படும். வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாள் சிறப்பு பூஜைக்கு பிறகு 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 12-ந் தேதி நடை திறக்கப்படும். 13-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி முதல் 21-ந் தேதியும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக செப்டம்பர் 10-ந் தேதி திறக்கப்பட்டு 15-ந் தேதி அடைக்கப்படும்.

புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும், ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, அக்டோபர் 28-ந் தேதி நடை திறக்கப்படும். மறுநாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை அடைக்கப்படும். பின்னர் 2027 மண்டல சீசன் நவம்பர் 16-ந் தேதி ஆரம்பமாகும். மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு மண்டல சீசனை முன்னிட்டு சபரிமலையில் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு நேற்று மாலை 5 மணி முதல் https://www.onlinetdb.com என்ற இணைய தளத்தில் தொடங்கியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks