இந்தியாவில் முதல்முறையாக 25 வார கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத் தண்டு குறைபாட்டை சரிசெய்யும் அறுவை சிகிச்சையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவர்களின் அசாத்திய சாதனை!

வயோதிக நபருக்கு அறுவை சிகிச்சை என்றாலே மனதை பதறவைக்கும் இக்காலச்சூழலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் புதியதொரு சாதனையை படைத்துள்ளனர். பெண்ணின் கருவில் இருந்த 25 வார குழந்தைக்கு, முதுகுத்தண்டு குறைபாடு கண்டறியப்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் நோக்கில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் பாதிப்பை குழந்தை கருவில் இருக்கும்போதே சரிசெய்வதன் மூலம், அதுசார்ந்த மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியுமென எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் தாய் மற்றும் குழந்தை நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சாதனை இந்திய மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கருவில் உள்ள குழந்தைக்கு அதுவும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடைபெறுவது அத்தனை எளிதானதல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

Source: Read Full Article