தனிஷ்க் நகைகடை நகை கொள்ளை வழக்கு -கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்தை 5 ஆவது நாளாக தேடும் தனிப்படை காவல்துறையினர். சேலம் அருகே பிடிபட்டார்.

நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் வீட்டை சுற்றி 4 நாளாக காவல்துறை பாதுகாப்பு-நிஷாந்தின் வீட்டில் தொடர்ந்து சோதனை - தாயாரிடம் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்தை 5 நாட்களாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான மாடக்குளம் வயல்வெளியில் 3 ஆவது நாளாக கொள்ளை

இதனிடையே நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான மாடக்குளம் வயல்வெளியில் 3 ஆவது நாளாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாடக்குளம் கண்மாய் மற்றும் காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்கள், கிணற்று பகுதிகளிலும், மீனாட்சியின் வீடு அமைந்துள்ள திருப்பாலை, தபால்தந்திநகர், நாகனாகுளம் கண்மாய், பார்க்டவுண் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் நகைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என தேடி வருகின்றனர். நகை கொள்ளையடிக்க பட்ட தனிஷ்க் நகை கடையில் தனியார் பாதுகாவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிஷாந்தின் செல்போன் அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நகை கொள்ளையடித்த கொள்ளையன் நிஷாந்த் தர்ம்புரி சேசம்பட்டி பகுதியில் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article