துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ

துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
News Image

தமிழ்நாட்டின் சட்டமன்ற துணை சபாநாயகராக உறுப்பினராக பொறுப்பு வகிப்பவர் ரவிசங்கர். இவர் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தனது பகுதிக்கு தண்ணீர் விநியோகிப்பதில் பிரச்சினை இருப்பதாக புகார் கூறிய நபரை சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தையில் திட்டியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக, திமுக கண்டனங்களை பதிவிட்டனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தாக்குதலுக்கு ஆளான நபர் துணை சபாநாயகர் ரவிசங்கருடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது,

தவறான சித்தரிப்பு:

We believe everything you say, sir. Did the Deputy Speaker assault anyone? Explanation provided by the person affected: "I had simply come to visit Ravi Anna’s house. Nothing happened at all. Absolutely nothing happened. We are all part of the same party, traveling together like a family. The matter has been presented incorrectly on social media. It is being portrayed in a false light. Please do not believe these rumors."
— Suresh Elangovan (@sureshelangov12) November 9, 2026

யதார்த்தமாக துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் வீட்டிற்கு வந்தேன். கூட்ட நெரிசலில் கொஞ்சம் தள்ளுமுள்ளு ஆகிவிட்டது. வேறு ஒன்றும் இல்லை. அதை சமூக ஊடகங்களில் தவறாக சித்தரித்து போய்க்கிட்டு இருக்கதாக சொன்னார்கள். என்னடா நம்ம கட்சிக்குள்ளே இப்படி? ரவிசங்கர் வேட்பாளராக இருந்தபோது நாம் வேலை பார்த்தோம். ஜெயிக்க வைத்தோம்.

ஒன்னுமே இல்லாத விஷயத்தை வலைதளங்களில் சித்தரிக்கிறார்களே? எதுவுமே நடக்கவில்லை. எங்கள் கட்சியின் உள்ளே குடும்பமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். தவறாக சித்தரிக்கிறார்கள். யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

முடிவுக்கு கொண்டு வந்த துணை சபாநாயகர்:

இந்த சம்பவம் தொடர்பாக துணை சபாநாயகர் ரவிசங்கர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் இந்த வீடியோவை வெளியிடும்போது அவர் உடனிருந்தார். இந்த விவகாரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதைத் தடுக்கும் நோக்கில் உடனடியாக வீடியோவை ரவிசங்கர் வெளியிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks