வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?

வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
News Image

பாரசீக வளைகுடாவில் வணிகக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்

பதற்றத்துடன் காணப்படும் பாரசீக வளைகுடா

ஈரானுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ள கடற்பரப்பே பாரசீக வளைகுடா என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சிக்கல் என்னவென்றால் பாரசீக வளைகுடாவிற்குள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கு ஹோர்மூஸ் நீரிணை ஒன்றே பிரதான வழி. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் கடல் வழிப்போக்குவரத்திற்கு ஹோர்மூஸ் நீரிணையை நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போரின் காரணமாக இரு தரப்பு நாடுகளும் தங்கள் அனுமதியின்றி பயணிக்கும் கப்பல்களை வழிமறிப்பதும் தாக்குதல் நடத்துவதும் அவ்வப்போது நிகழ்கிறது.

தாக்குதலில் இந்திய மாலுமி படுகாயம்

லைபீரிய நாட்டு கொடியுடன் பாரசீக வளைகுடாவில் பயணித்த கச்சா எண்ணெய் கப்பலான எம்.டி. புஜைரா எனர்ஜி என்ற சரக்கு கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. சரக்கு கப்பலில் 6 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தமாக 18 பேர் பயணித்த நிலையில், ஒரு இந்திய மாலுமி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், தாக்குதலுக்குள்ளான இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய கப்பல் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks