"வீடு பார்க்கலாம் என பைக்கில் அழைத்துச் சென்ற கணவன் " இறுதியில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்

"வீடு பார்க்கலாம் என பைக்கில் அழைத்துச் சென்ற கணவன் " இறுதியில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்
News Image

"கணவன் - மனைவி இடையே தகராறு"

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சின்னபாலத்து தெருவைச் சேர்ந்தவர் கணேசன் ( வயது 26 ) இவர் லாரி மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவருக்கும், 21 வயதுடைய ரசிகா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணேசனுக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கணவரைப் பிரிந்த ரசிகா, அதே தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

"ரத்த வெள்ளத்தில் சடலம்"

இந்த நிலையில் , இரண்டு நாட்களுக்கு முன்பு ரசிகா தனது பெரியப்பா மகன் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காகக் கணேசனுடன் சென்றுள்ளார். அப்போது இருவரும் சமாதானமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வசித்து வந்த வீட்டில் பாம்புத் தொல்லை இருப்பதாகவும், வேறு வீட்டிற்குச் செல்லலாம் என்றும் கணேசன் கூறியுள்ளார்.

இதற்காக ஒரு வீட்டில் ரூ.5,000 முன்பணமாகக் கொடுத்திருந்ததாகவும், மேலும் ரூ.10,000 கொடுக்க வேண்டியிருந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே, அந்தப் பணத்தை வாங்குவதற்காக ரசிகாவைக் கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் , அதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திருச்செங்கோடம்பாளையம், சண்முகபுரம் களரங்காடு சாலைப் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி ஆலையின் பின்புறம், குமரன் கோவில் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத காலி இடத்தில் ரசிகா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

அவரது கழுத்து , மார்பு , தொடை , முதுகு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்துள்ளன. அந்தப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, திருச்செங்கோடு ஊரகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரசிகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

திருச்செங்கோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினியும் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இதற்கிடையே, ரசிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற கணேசனின் செல்போன் அணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விசாரணை நடத்திய போது திருச்செங்கோடு அருகே உள்ள கலரங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி ரசிகாவை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரிய வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks