"வீடு லீஸ் தேடுபவர்களே உஷார்" புதுமணத் தம்பதியிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண்

"வீடு லீஸ் தேடுபவர்களே உஷார்"  புதுமணத் தம்பதியிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண்
News Image

"வீடு லீசுக்கு விடுவதாக ஏமாற்றிய பெண்"

சென்னை பெரம்பூர் செங்கல்வராயன் தெருவில் வசித்து வரும் விவேக் என்பவர் , கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணமான புதிதில் குடும்பத்துடன் வசிப்பதற்காக வீடு லீசுக்கு தேடி வந்துள்ளார். அப்போது, சென்னை ஜி.கே.எம். காலனி, வ.உ.சி. 5 வது தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளர்களான நிர்மலா மற்றும் அவரது கணவர் விமல்ராஜ் ஆகியோர் தங்களது வீட்டை ரூ.6.8 லட்சத்திற்கு லீசுக்கு விடுவதாகப் பேசியுள்ளனர்.

இதனை நம்பிய விவேக், கடந்த 30.12.2023 மற்றும் 01.02.2024 ஆகிய தேதிகளில் இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.6.8 லட்சத்தை அவர்களிடம் வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிர்மலா, வீட்டின் ஒரு சாவியையும் விவேக்கிடம் கொடுத்துள்ளார்.

வீட்டைச் சுத்தம் செய்து கொடுப்பதாகவும், ஒரு வாரம் கழித்து வந்து குடியேறிக் கொள்ளுமாறும் நிர்மலா தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஒரு வாரம் கழித்து விவேக் வீட்டிற்குச் சென்ற போது, அந்த வீட்டில் ஏற்கனவே வேறு நபர்களைக் குடியமர்த்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

"காவல் நிலையத்தில் புகார்"

இதனால் அதிர்ச்சியடைந்த விவேக் , நிர்மலா மற்றும் அவரது கணவர் விமல்ராஜிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, தங்களிடம் அதிகப் பணம் கொடுத்ததால் வேறு நபர்களை வீட்டில் குடியமர்த்தியதாகவும், விவேக்கிடம் பெற்ற பணத்தை விரைவில் திருப்பித் தருவதாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2025 - ம் ஆண்டு மே மாதம் வரை சிறிது சிறிதாக மொத்தம் ரூ.4 லட்சத்தை மட்டும் விவேக்கிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.2.8 லட்சத்தைத் தொடர்ந்து திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே , சமீபத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கூறி விவேக்கை மிரட்டி அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விவேக், தன்னிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிர்மலா மற்றும் அவரது கணவர் விமல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரவள்ளூர் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிர்மலா ( வயது 45) என்பவரைப் பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நிர்மலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா , நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks