”திமுக ஆட்சியில் இந்த தெருக்கூத்தாடிகள் பாடியது இனித்ததா?” சேகர் பாபுவிற்கு புஷ்பவனம் கேள்வி

”திமுக ஆட்சியில் இந்த தெருக்கூத்தாடிகள் பாடியது இனித்ததா?” சேகர் பாபுவிற்கு புஷ்பவனம் கேள்வி
News Image

Pushpavanam kuppusamy: கடந்த திமுக ஆட்சியில் இதே தெருக்கூத்தாடிகள் பாடியதை கேட்டு ரசித்தீர்களே என, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு, கிராமிய கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்:

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை போற்றி பாடியதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இசை கச்சேரியை முன்னின்று நடத்திய புஷ்பவனம் குப்புசாமி விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நான் பாடிய பாடலில் எந்த குறையும் இல்லை. நான் பாடியது இதுதான்,  நம் தமிழக முதல்வர் போல் அந்த இடத்தில் கமா (,) உள்ளது. தமிழக முதல்வர்போல், வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் யாரிடம் வேண்டிக் கொண்டால், நம் தமிழக முதல்வர் போல வேண்டிக்கொண்டால், யாரிடம் வேண்டிக் கொண்டால்? வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால், வெற்றி நிச்சயம் உண்டு. இப்போது புரிகிறதா? அவரை நான் சாட்சியாக சொல்கிறேன். வெற்றி எப்படி நிச்சயம்? அதற்கு ஒரு சாட்சி வேண்டும். நீங்களும் வேண்டும் வரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லாேரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.

தெருக்கூத்தாடிகள் என சாடுவதா?

முருகனுக்கு இணையாக முதலமைச்சரை பாடிவிட்டேன் என குறைசொல்லி திட்டுகிறீர்கள். அதுவும் எப்படி தெருக்கூத்தாடிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் இப்படி தான் இருக்கும் என்று சேகர்பாபு பேசியிருக்கிறார். வயதில் முதிர்ந்த அவர் இப்படி பேசலாமா? எனது மனதை மட்டும் காயப்படுத்தவில்லை. மொத்த கிராமிய இசைக்கலைஞர்களயும் நீங்கள் இழிவுபடுத்திவிட்டீர்கள். சென்ற ஆண்டு இதே இசைக்கலைஞர்களை வைத்து தானே நீங்கள் நிகழ்ச்சியை நடத்தினீர்கள். சென்ற உங்கள் ஆட்சியில் இதே தெருக்கூத்தாடிகள் பாடிய பாடல்களை தானே நீங்களும் கேட்டு ரசித்தீர்கள். இப்போது நாங்கள் தெருக்கூத்தாடிகள் ஆகிவிட்டோமா? தெருக்கூத்தாடிகள் என்றால் அவ்வளவு எளப்பமா?

இதையும் படியுங்கள்: Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?

கலைஞர்களை புன்படுத்தாதீர்கள்:

சிவபெருமானே கூத்தன் தான். அவரே ஆனந்த தாண்டவமாடிய கூத்தன் தான். கூத்து என்றால் இழிவு அல்ல. தயவு செய்து கோவத்தில் கூட அந்த வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தாதீர்கள். மொத்த கலைஞர்களையும் புன்படுத்தாதீர்கள். முருகனின் அன்பர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் யாரையும் புன்படுத்தவோ, உயர்த்தி பேசவோ, ஒப்பிடவோ இல்லை.  எங்களிடம் எந்த குறையும் இல்லை. எதுவாக இருந்தாலும் எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் அதை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கிராமிய இசைக் கலைஞர்களை கொச்சைப்படுத்திய சேகர்பாபு. இவ்வளவு திமிர் ஆணவம் இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த முடியும். https://t.co/st1Y0EStE4
— RamKumarr (@ramk8060) November 17, 2026

அதன்படி நடக்கிறோம்.ஆனால், இந்த நிகழ்ச்சியில் நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் என்னை திட்டுவதை விட்டுவிட்டு, எங்கள் மொத்த கலைஞர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்” என கிராமிய கலைஞரும், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவருமான புஷ்பவனம் குப்புசாமி வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks