தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!

தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
News Image

கண் பாதுகாப்பினை உறுதிசெய்து, விழிப்புணர்வுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்:

பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

‘தீபாவளி’ என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். இந்த திருநாளன்று மக்கள் தீபங்கள் ஏற்றியும், வீடுகளை அலங்கரித்தும், இனிப்புகளைப் பகிர்ந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது நமது கலாச்சார மரபு. நண்பர்களையும் உறவினர்களையும் ஒன்றிணைக்கும் இப்பண்டிகையின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு இடையே பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து  மக்கள் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை. இந்த பண்டிகைக் காலத்தில் ஏற்படும் பெரும்பாலான பட்டாசு விபத்துகள் நேரடியாக கண்களைப் பாதித்து, கடுமையான காயங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும் நான் உணரவேண்டும். ஆண்டுக்கு ஆண்டு, பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

கண்ணின் உள் அமைப்புகளையும் பாதிக்கும்

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவச் சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். கற்பகவல்லி. இ கூறுகையில், “பட்டாசுகளால் ஏற்படும் கண் காயங்கள், ஆரம்பத்தில் தோன்றுவதைவிட மிகவும் தீவிரமானவையாக இருக்கலாம். வெளிப்புறக் காயம் சிறியதாகத் தோன்றினாலும், அதன் பாதிப்பு கண்ணின் உள் அமைப்புகளையும் பாதித்து, பார்வைக்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும். சிகிச்சையைத் தாமதப்படுத்துவதோ அல்லது வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முயற்சிப்பதோ குணமடைவதில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். பட்டாசு விபத்தால் கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்ணில் அழுத்தம் கொடுப்பதையோ, கண்ணைத் தேய்ப்பதையோ அல்லது கண்ணில் சிக்கியுள்ள துகள்களைத் தாங்களாகவே அகற்ற முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். உடனடியாகக் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தத் தீபாவளியில், பண்டிகையைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பார்வையைப் பாதுகாப்பதும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வோம்.”

பட்டாசுகளால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்:

மனித உடலில் உள்ள மிக மென்மையான உறுப்புகளில் கண்களும் ஒன்று. ஒரு சிறிய தீப்பொறியோ அல்லது துகளோ கூட கண்ணை பெருமளவில் சேதப்படுத்தும். பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிப்பவர்களை மட்டுமின்றி, அருகில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் கண் காயங்களை ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டிருப்பதை நம்மில் பலரும் அலட்சியப்படுத்துகிறோம்.

தீபாவளியின் போது கண்களில் ஏற்படும் பொதுவான பாதிப்புகள்:

• கருவிழியில் சிராய்ப்புகள்: சிறிய துகள்கள், சாம்பல் அல்லது தீப்பொறிகள் கண்ணின் வெளிப்படையான முன் மேற்பரப்பான கருவிழியை (கார்னியா) பாதிக்கலாம். இதனால் வலி, கண் சிவப்பது, கண்ணீர் வடிதல் மற்றும் பார்வையில் கூச்சம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

• கண் விழி சிதைவு: பட்டாசு வெடித்து  அது கண்ணில் படுமானால்,  கடுமையான அழுத்தத்தால் கண்விழி சிதையக்கூடும்.

• தீக்காயங்கள்: வெப்பமான தீப்பொறிகள் அல்லது தீப்பிழம்புகள் கண் இமைகள் மற்றும் கண்ணின் மேற்பரப்பை தீக்காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

• கண்ணின் வெண்படலத்தில் தீக்காயங்கள்: வெப்பம் அல்லது ரசாயனங்கள் காரணமாக கண்ணின் வெள்ளைப் பகுதியை மூடியுள்ள மெல்லிய சவ்வில் பாதிப்பும், சேதமும் ஏற்படலாம்.

• கண்ணுக்குள் அந்நியப் பொருட்கள்: தூசி, குப்பைகள் மற்றும் வெடிக்கும் பொருட்களின் துகள்கள் கண்ணுக்குள் நுழையக்கூடும். இதனால் எரிச்சல் மட்டுமின்றி, கண் சேதத்திற்கான சாத்தியத்திற்கும் வழி வகுக்கும்.

• கண்ணின் உட்புறத்தில் ரத்தக்கசிவு: பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிர்வும், தாக்கமும் கண்ணுக்குள் இருக்கும் மெல்லிய ரத்த நாளங்களை சேதப்படுத்தி உள்ளார்ந்த இரத்தக்கசிவை ஏற்படுத்தலாம்.

• விழித்திரை பாதிப்புகள்: சக்திவாய்ந்த வெடிப்புகள் விழித்திரைக்கு (ரெட்டினா) கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இதனால் பார்வை மங்கலாவதுடன், நிரந்தர பார்வை இழப்பும் கூட ஏற்படலாம்.

• ரசாயனங்களால் ஏற்படும் காயங்கள்: அதிக ரசாயனக் கலவை கொண்ட பட்டாசுகளில் உள்ள மூலப்பொருட்கள் கண்ணுக்குள் ஊடுருவுமானால் கண் எரிச்சல் ஏற்படும் அல்லது கண்களில்  தீக்காயங்களை விளைவிக்கக்கூடும்.

தீபாவளி கொண்டாட்டங்களின் போது கண்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க:

• எப்போதும் திறந்தவெளியில் மட்டுமே பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; பட்டாசுகளைக் கையாண்ட பின் சுத்தமான தண்ணீரில் கைகளைக் கழுவுங்கள்.

• பட்டாசுகளை பற்றவைக்கும்போது ஒரு கை நீள தூரத்தில் இருந்து அதை செய்ய வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தால், குறைந்தது ஐந்து மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். எந்தவொரு பட்டாசையும் உங்கள் முகத்திற்கு அருகில் வைத்தோ அல்லது அதன் மீது தலையைக் குனிந்தோ பற்றவைக்கக் கூடாது.

• பட்டாசு வெடிக்கச் செல்வதற்கு முன் உங்கள் கான்டாக்ட் லென்ஸ்களை  அகற்றிவிடுங்கள். பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பிடிக்கும் சிந்தடிக் ஆடைகளை (செயற்கை இழை ஆடைகள்) அணிய வேண்டாம்; சரியான காலணிகளை அணியவும்.

• பட்டாசு வெடிக்கும்போது, எதிர்பாராத விதமாக தீப்பற்றினால் உடனடியாக அணைக்க, ஒரு வாளி தண்ணீரையும், மணலையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவும்.

• பட்டாசுகளை மூடிய பெட்டியில், குழந்தைகளால் தொட முடியாத பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

• வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையாள ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம், ஏனெனில் அவை எதிர்பாராத நேரத்தில் பற்றிக்கொண்டு வெடிக்கலாம். எனவே, அவைகளின் அருகில் உடனடியாகச் செல்லவோ அல்லது மீண்டும் பற்றவைக்கவோ முயற்சிக்க கூடாது.

• பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.

கண்ணில் காயம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய ஆலோசனைக் குறிப்புகள்:

பட்டாசுகளால் கண்ணில் காயங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். பின்வரும் சில முதலுதவி குறிப்புகள் காயம் அடைந்தவர்களின் பார்வையைப் பாதுகாக்க உதவும்:

• புகை, தூசி அல்லது சாம்பல் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தினால், கண்களை கசக்கக் கூடாது. கசக்குவது எரிச்சலை அதிகப்படுத்தி, காயத்தை தீவிரப்படுத்தலாம். குறைந்தது 20 நிமிடங்களுக்கு சுத்தமான தண்ணீரில் கண்களைக் கழுவவும். எரிச்சல் குறையாமல் தொடர்ந்து இருக்குமானால், மருத்துவரை அணுகவும்.

• பட்டாசுகளை கையாண்ட பிறகு, கைகளைக் கழுவாமல் கண்களை தொடக் கூடாது.

• கண்களில் விழுந்த துகள்கள் அல்லது அந்நியப் பொருட்களை நீக்க நீங்களாகவே முயற்சிக்கக் கூடாது.

• மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் களிம்புகள், கண் சொட்டு மருந்துகள் அல்லது வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தக் கூடாது.

• கண்ணுக்குள் ஏதேனும் ஆழமாக ஊடுருவியிருப்பதாக சந்தேகித்தால், கண்ணைக் கழுவவோ அல்லது அழுத்தவோ கூடாது. எந்த அழுத்தமும் கொடுக்காமல் ஒரு திடமான கவசம் கொண்டு கண்களை மூடி பாதுகாத்து, உடனடியாக அவசர சிகிச்சையை நாடவும்.

காயம் சிறியதாக தோன்றினாலும் அல்லது பார்வை தெளிவாக இருப்பதாக தோன்றினாலும் கூட, மருத்துவ உதவியை நாட பொதுமக்கள் ஒருபோதும் தாமதிக்கக் கூடாது. பட்டாசு விபத்துக்குப் பிறகு வலி, கண் சிவத்தல், மங்கலான பார்வை, கூச்சம் அல்லது தொடர்ந்து கண்ணீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

எதிர்பாராத விதமாக கண்ணில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் பொதுமக்களின் உதவிக்காக அவசரநிலை சேவைகளை வழங்க டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை எப்போதும் தயார் நிலையில் இருக்கிறோம். தயவுசெய்து தொடர்புகொள்க: 95949 24048.

இந்த தீபாவளியை பாதுகாப்பான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான திருநாளாகக் கொண்டாடி மகிழ்வோம்!

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks