ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். திருமண விழாவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே மேடையில் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் ஷ்ரேயா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஒரே மேடையில் விஜய், த்ரிஷா

இந்தத் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் கலந்துகொண்டார். நடிகை த்ரிஷாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் இருவரும் ஒரே மேடையில் மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், விஜய் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விஜய் பழுப்பு நிற உடையிலும், த்ரிஷா இளஞ்சிவப்பு நிறப் புடவையிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இருவரும் ஒரே மேடையில் தோன்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பங்கேற்ற முக்கியப் பிரபலங்கள்

இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி தனது மனைவி பாரதியுடன் கலந்துகொண்டார். தெலங்கானா பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தனது மனைவி ஷைலிமாவுடன் பங்கேற்றார். தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் தொழில்துறை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது

Source: Read Full Article