தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த ரியாலிட்டி ஷோவின் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்:

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக ஜேசன் உள்ளார். இந்த வார நிகழ்ச்சியில் ஜேசன் நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜய் சேதுபதியை கேலி செய்யும் விதமாக நடந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Day70 #Promo2 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/h9g3UWewc0

— Vijay Television (@vijaytelevision) November 15, 2026

நடந்தது என்ன?

விஜய் சேதுபதி அவரிடம் பேசும்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜேசன் ரசிகர்கள் கைதட்டும்போது கை காட்டினார். பின்னர், அதை வாசனுக்கு திருப்பிவிடுவது போல நடந்து கொண்டார். மேலும், விஜய் சேதுபதி அவரிடம் கேள்வி கேட்கும்போதும் அவரது உடல்மொழி விஜய் சேதுபதியை கேலி செய்யும் விதமாகவே அமைந்தது.

Such disrespect to host is not acceptable 🔴 S8 - #Arun disrespect Host with argument -> Evict on next week S9 - #Prajin disrespect Host with Argument-> Evict on next week S10 - #Jason disrespect Host with argument-> will he get evict @vijaytelevision ? #BiggBossTamil10 #BiggBoss10Tamil https://t.co/Ar4eAnzZQ7

— Master Beast🔥 (@Master_beast10) November 15, 2026

அப்போது, விஜய் சேதுபதி அவரிடம் இவ்வாறு நடந்து கொண்டால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றிவிடுவோம் என்று எச்சரித்தார். ஆனால், அதையும் பொருட்படுத்தாத ஜேசன் நானே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கருத்து:

சிலர் ஜேசனை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்றும், சிலர் விஜய் சேதுபதிக்கு இது தேவைதானா? நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்த இடத்தில் கமல்ஹாசன், சுதீப், சல்மான்கான் இருந்திருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில சீசன்கள் பெரியளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில், இந்த சீசனை விறுவிறுப்பாக்கவும், பரபரப்பாக்கவும் இதுபோன்று செய்வதாகவும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article