மேற்கு வங்கம் மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து மிசோரமில் உள்ள சாய்ரங்கிற்கு கொல்கத்தா - சாய்ராங் எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தடம் புரண்ட ரயில்:

அசாம் மாநிலம் வழியாக செல்லும் இந்த ரயில் இன்று காலை அசாம் தலைநகர் கவுகாத்தி வழியாக சென்று கொண்டிருந்தது. கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் திகாரு ரயில்வே நிலையத்தின் அருகே காலை 6.54 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலின் ப்ரேக் கட்டுப்பாடு செயலிழந்தது.

असम में गुवाहाटी के पास डिगारू रेलवे स्टेशन पर "कोलकाता-सैरंग एक्सप्रेस" पटरी से उतर गई ! इस हादसे में ट्रेन के इंजन सहित करीब 7 डिब्बे पटरी से उतरे हैं और कई यात्री घायल हुए हैं। #TrainAccident #AssamTrainAccident #Assam https://t.co/ybjpsd7C4q

— Suraj Kumar ( Bhim Army ) (@Suraj__50) November 11, 2026

இதனால், திடீரென தண்டவாளத்தில் இருந்து ரயில் தடம்புரண்டது. வேகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ப்ரேக் பிடிக்காத போது தடம்புரண்டதால் 6 பெட்டிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்தது. இதனால், பயணிகள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் இந்த விபத்து காரணமாக காயம் அடைந்துள்ளனர்.

மீட்பு பணிகள் தீவிரம்:

#Train derailment in #Assam Kolkata–Sairang Express derailed near #Guwahati. Seven coaches, including the engine, have derailed. https://t.co/ZrpBvASGE1

— Ajay Kaul (@AjayKauljourno) November 11, 2026

விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார், காவல்துறையினர், தீயணைப்பு மற்றம் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தின்போது ரயிலில் எஞ்ஜின் லோகோ பைலட் உள்ளே இருந்து எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்திற்கு காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு இந்தியாவின் போக்குவரத்தில் இந்த கொல்கத்தா - சாய்ரங் ரயில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிசோரத்தில் இருந்து வடகிழக்கு இந்தியாவிற்குச் செல்வதற்கு இந்த ரயில் மிக மிக முக்கியமான போக்குவரத்து அம்சமாக கருதப்படுகிறது. இந்த ரயில் விபத்திற்கு ஆளாகியிருப்பதால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article