Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..

Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
News Image

Anbil Mahesh: தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றோடு முடியுமா சிறைவாசம்?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அக்டோபர் 26ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நவம்பர் 6ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பிறகு அந்த நீதிமன்ற காவல் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றுடன் அந்த உத்தரவு முடிவடைய உள்ளதால், நீதிமன்றம் சொந்த ஜாமினில் அன்பில் மகேஷை விடுவிக்குமா? அல்லது மீண்டும் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா? என திமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நிராகரிப்பு.. இழுபறியில் ஜாமின்..

நீதிமன்ற காவல் உத்தரவை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சார்பில் உடனடியாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி நவம்பர் 10ம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தை அன்பில் மகேஷ் தரப்பு நாடியது. ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறை அனுமதி கோரியதால் வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை அறிக்கைக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பு அவகாசம் கோரியதால், ஜாமின் கோரிக்கை தொடர்பான விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக்கோரிய அன்பில் மகேஷின் மனு மீதான விசாரணை வரும் 30ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

சிக்கலில் அன்பில் மகேஷ்..

இதனிடையே, தனியார் பள்ளிகளை மிரட்டி 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த, திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மற்றும் அன்பில் மகேஷின் ஓட்டுனர் சரவணன் ஆகியோர் அடுத்தடுத்து சரணடைந்துள்ளனர். அதில் முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரித்ததில், “திட்டமிட்டு, தனியார் பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து, எங்களை தாண்டி தேவையான அனுமதிகளை பெற முடியாது என மிரட்டி பணம் வசூலித்தோம். இது அனைத்தும் முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே அரங்கேறியது” என வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றுடன் முடிவடையும் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு ஜாமின் கிடைப்பது சந்தேகம் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks