Anbil Mahesh Bail Petition: தனியார் பள்ளிகளுக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் பெற்றதாக கடந்த அக்டோபர் 26ம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஷிற்கு ஜாமின் கிடைக்குமா?

திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரங்களை வழங்க, லஞ்சம் பெற்றதாக அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் 100 கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதாக கூறப்பட்டது. இந்த விசாரணையின் நீட்சியாக, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் இன்று வெளியிட உள்ளது. அதன்படி, தீபாவளியை சிறையிலேயே கொண்டாடிய அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? அல்லது தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை தொடருமா? என அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கைதும்.. நீதிமன்ற உத்தரவும்..!

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் அன்று இரவே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் அன்பில் மகேஷை கைது செய்தது ஏற்கமுடியாது, அவருக்கு நீதிமன்ற காவல் விடுக்கக் கூடாது என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால், லஞ்சப் புகாரில் சுமார் 400 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாலும், அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரித்தால் தான் பல உண்மைகள் வெளிவரும் எனவும், தொடர்ந்து அவர் வெளியே இருந்தால் ஆதாரங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அன்பில் மகேஷை நவம்பர் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை

விசாரணை காவலும்..ஜாமின் மனுவும்..

புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷ் ஜாமின் மனு தாக்கல் செய்ய, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், நவம்பர் 2 முதல் 4ம் தேதி வரை என 3 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனிடையே, இதனிடையே, ஜாமின் மனு மீதான விசாரணையில், வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அரசு கூடுதல் செயலாளர்தான் அரசாணையில் கையெழுத்திட்டார் என்றும் அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இது 'விஞ்ஞானப்பூர்வமான ஊழல்' என்றும், லஞ்சப் பணம் அன்பில் மகேஷ் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள சரவணன் என்பவரை விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் முடிவாக, ஜாமின் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம், கடந்த 6ம் தேதியுடன் முடிவுற்ற அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

16 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? என திமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Source: Read Full Article