AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!

AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
News Image

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு குளிர்சாதன வசதி கொண்ட 1000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்திடவும், பேருந்துப் பணிமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும்.

1,000 ஏசி மின்சார பேருந்துகள்

தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்திடும் விதமாகவும் நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு மொத்தச் செலவு ஒப்பந்த (Gross Cost Contract) முறையின் கீழ், 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்திடவும். இப்பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பேருந்துப் பணிமனைகளில் ஏற்படுத்துவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் கருவிகள்

அதேபோல் ரூ.17.99 கோடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (GPS), அவசர உதவி பொத்தான்கள் பொருத்தும் பணி முதலமைச்சர் விஜய் ஒப்புதல்  அளித்துள்ளார். அதாவது பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும். இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (Vehicle Location Tracking Device) மற்றும் அவசர உதவி பொத்தான்களைப் (Panic Buttons) பொருத்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் 08.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்கள். இதன்படி, எட்டு போக்குவரத்துக் கழகங்களின் 13,490 வாகனங்களில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளும், 13.776 அவசர உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்திட ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், போக்குவரத்துக் கழங்களுக்கு ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அவசர எச்சரிக்கைகள்

AIS 140 தரநிலையிலான இக்கருவிகள் மையக் கண்காணிப்பு அமைப்புடன் (Central Control Centre) இணைக்கப்படும். இதன் மூலம் பேருந்தின் இருப்பிடம், இயக்க வேகம். நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுதல் மற்றும் அவசர எச்சரிக்கைகள் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்காணிக்க இயலும். இதனால் இயக்க மேற்பார்வை மேம்படுவதுடன், தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் வழிவகுக்கும்.

பயணத்தின்போது அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் அவசர உதவி பொத்தானை அழுத்துவது மூலமாக கட்டுப்பாட்டு மையத்திற்கு உதவியினை கோரிட இயலும். அதனடிப்படையில் வாகனத்தின் இருப்பிடத்தை உடனடியாக அறிந்து. காவல்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைவான உதவி வழங்க இவ்வமைப்பு வழிவகுக்கும். பயணிகளின் பாதுகாப்பு, அவசரகால உதவி மற்றும் இயக்கக் கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் இந்த நடவடிக்கை, மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வழிவகுக்கும். இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks