டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!

டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
News Image

சென்னை: வெளிநாட்டுக் கல்விக்காக அமெரிக்காவைத் தேர்வு செய்யும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள கடுமை, கல்விக்குப் பிறகு அங்கேயே தங்கி வேலை செய்வதற்கான வாய்ப்புகளில் உருவாகியுள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு இலையுதிர்கால கல்விப் பருவத்தில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை 9 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

முதல் முறையாக அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் புதிய மாணவர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதம் சரிந்துள்ளது. உலக அளவில் உயர்கல்விக்கான முக்கிய மையமாகத் திகழும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வித் திட்டங்களிலும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

திரைகடலோடி திரவியம் தேடு என்ற பழமொழியைப் போலவே, கடல் கடந்து கல்வி கற்பதும் இன்றைய இளைஞர்களின் முக்கியக் கனவாக மாறியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், மேலாண்மை, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்கல்வி பெறுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய மாணவர்களின் விருப்பப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள், நவீன ஆய்வகங்கள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் உயர்தர கல்வி ஆகியவை மாணவர்களை இந்த நாடுகளை நோக்கி ஈர்த்து வருகின்றன.

ஆனால், அமெரிக்காவில் அண்மைக்காலமாக உருவாகியுள்ள அரசியல் மற்றும் குடியேற்றச் சூழல் காரணமாக அந்நாட்டைத் தேர்வு செய்வதில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

9 சதவீதம் குறைந்த வெளிநாட்டு மாணவர் சேர்க்கை

அமெரிக்காவின் சர்வதேச கல்வி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு இலையுதிர்கால கல்விப் பருவத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், முதல் முறையாக அமெரிக்காவுக்கு வந்து உயர்கல்வி பயிலும் புதிய மாணவர்களின் சேர்க்கை 15 சதவீதம் சரிந்துள்ளது. இது சாதாரணமான ஏற்ற இறக்கமாக மட்டும் பார்க்கப்படவில்லை.

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சர்வதேச மாணவர்களின் முடிவுகளை நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாக கல்வித்துறையினர் இதைக் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. குறிப்பாக, முதுநிலைப் படிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்காக இந்திய மாணவர்கள் அதிக அளவில் அமெரிக்காவைத் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய மாணவர்களின் வருகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவில் படிப்பதற்காக பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு, கல்விக் கட்டணம், தங்குமிடம், பயணச் செலவு உள்ளிட்டவற்றுக்காகப் பெரும் தொகையைச் செலவிடும் குடும்பங்கள் தற்போது விசா கிடைக்குமா, படிப்பை முடித்த பிறகு வேலை கிடைக்குமா, அங்கேயே தங்க முடியுமா என்ற பல்வேறு கேள்விகளுடன் காத்திருக்கின்றன.

பெற்றோர்களிடம் அதிகரிக்கும் அச்சம்

அமெரிக்காவில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வீணா துபால் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பான கல்விச் சூழலை வழங்கும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் விசா தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுமோ, திடீரென குடியேற்ற அந்தஸ்து ரத்து செய்யப்படுமோ என்ற கவலை குடும்பங்களிடம் அதிகரித்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் சேர்க்கை பெற்றிருந்த சில மாணவர்கள்கூட தங்களது பயணத் திட்டங்களை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

படித்தவுடன் வேலை செய்யும் வாய்ப்புக்கும் சிக்கல்

அமெரிக்காவில் உயர்கல்வி பெறுவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், படிப்பை முடித்த பிறகு அங்கேயே தங்கி தற்காலிகமாகப் பணியாற்றக் கிடைக்கும் வாய்ப்பாகும். இதற்கு ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங் (Optional Practical Training - OPT) என்று பெயர். இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்புடன் தொடர்புடைய துறைகளில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற முடியும். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கும் நடைமுறையும் உள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் அனுபவம் பெறுவதுடன், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வேலைவாய்ப்பு முறையிலும் புதிய கட்டுப்பாடுகள் வரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. OPT திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொரு வெளிநாட்டு மாணவருக்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் 70 ஆயிரம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முன்மொழிவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முன்மொழிவு இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அதிகப்படியான நிதிச் சுமை கல்வி நிறுவனங்களின் சேர்க்கை முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

விசா ரத்து, கைது நடவடிக்கைகளால் பதற்றம்

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்ற அந்தஸ்து ரத்து செய்யப்படுவது, கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல் தொடர்பான செய்திகள் வெளியாகி வருவதும் மாணவர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. முறையான விசா பெற்று கல்வி பயிலும் மாணவர்கள்கூட தங்களது குடியேற்ற நிலை தொடர்பான விதிமுறைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்கி கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விதிமுறைக்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு மாணவர்களுக்கான குடியேற்ற நடைமுறைகள் தொடர்பாக சட்டரீதியான விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாற்று நாடுகளைத் தேடும் மாணவர்கள்

அமெரிக்காவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை குறைவதற்கான முக்கியக் காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 88 சதவீத கல்வி நிறுவனங்கள் விசா நடைமுறைகளில் நிலவும் சிக்கல்களே மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளன.

அதேபோல், 70 சதவீத கல்வி நிறுவனங்கள் பயணக் கட்டுப்பாடுகளையும் காரணமாகக் குறிப்பிட்டுள்ளன. மேலும், OPT திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் வேறு நாடுகளைத் தேர்வு செய்வார்கள் என்று 95 சதவீத கல்வி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் அந்நாட்டின் உயர்கல்வித் துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

இதன் காரணமாக கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய மாணவர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. சில நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவுக்கு இணையான கல்வித் தரத்துடன் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் படிக்கக்கூடிய வாய்ப்புகளை மாணவர்கள் தேடுகின்றனர்.

விசா நடைமுறைகள் எளிமையாக இருப்பது, படிப்பை முடித்த பிறகு வேலை தேடுவதற்கான கால அவகாசம் கிடைப்பது போன்ற அம்சங்களும் மாணவர்களின் நாட்டுத் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் ரூ.22,600 கோடி இழப்பு

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவது அமெரிக்கக் கல்வி நிறுவனங்களை மட்டுமின்றி அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதுடன், தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவக் காப்பீடு, இதர அன்றாடச் செலவுகள் மூலமாகவும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச கல்வி தொடர்பான அமைப்பான நாப்சா (NAFSA) நடத்திய ஆய்வில், இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்பு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.22 ஆயிரத்து 600 கோடியாகும். மாணவர் சேர்க்கை குறைவதால் பல்கலைக்கழகங்களின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களைச் சார்ந்து இயங்கும் தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்படக்கூடும்.

முதுநிலைப் படிப்புகளில்தான் அதிக சரிவு

வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள சரிவு அனைத்து கல்விப் பிரிவுகளிலும் ஒரே அளவில் இல்லை. குறிப்பாக, முதுநிலைப் படிப்புகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில், இளநிலைப் படிப்புகளில் 3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உயர்கல்வி பெறுவதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய நிலை, விசா நடைமுறைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, படிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை முதுநிலை மாணவர்களின் முடிவுகளை அதிகமாகப் பாதித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக குடியேற்றக் கொள்கைகளில் உடனடியாகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அமெரிக்க கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் சாரா ஸ்பிரீட்சர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவும், தேவையற்ற சிக்கல்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய மாணவர்களின் அடுத்த இலக்கு என்ன?

அமெரிக்கா தொடர்ந்து உலகின் முக்கியமான உயர்கல்வி இலக்குகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும், விசா கட்டுப்பாடுகள், அதிகரிக்கும் கல்விக் கட்டணம், குடியேற்ற நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவை மாணவர்களின் நாட்டுத் தேர்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் கல்வி பெறுவதற்காகப் பெற்றோர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பைச் செலவிடும் நிலையில், பாதுகாப்பான கல்விச் சூழலும் படிப்புக்குப் பிறகான வேலைவாய்ப்பும் மிக முக்கியமானதாக மாறியுள்ளன.

இதனால் இந்திய மாணவர்கள் அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மாற்று நாடுகளின் கல்வி வாய்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்ந்து நீடித்தால், அந்நாட்டுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகளாவிய கல்விச் சந்தையில் நாடுகளுக்கு இடையிலான போட்டியும் அதிகரிக்கக்கூடும். ஒருபுறம் மாணவர்களின் எதிர்காலம், மறுபுறம் அமெரிக்காவின் கல்வி மற்றும் பொருளாதார நலன் என இரண்டையும் இந்த மாற்றம் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டுக் கல்விக்கான இந்திய மாணவர்களின் கனவுகள் எந்த நாட்டை நோக்கித் திரும்பப் போகின்றன என்பதுதான் தற்போது கல்வித்துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks