முரசு புயல்: 6 அடி கடல் சீற்றம்! சென்னை, பழவேற்காட்டில் உச்சகட்ட எச்சரிக்கை! மக்களே உஷார்

முரசு புயல்: 6 அடி கடல் சீற்றம்! சென்னை, பழவேற்காட்டில் உச்சகட்ட எச்சரிக்கை! மக்களே உஷார்
News Image

ஆந்திராவில் முரசு புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. 6 அடி வரையிலும் சீற்றம் காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் கவனமாக இருக்கவும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் வர வேண்டாம் எனவும் திருவள்ளூர் ஆட்சியர் கவிதா அறிவுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், இன்றிரவு ஆந்திராவின் நெல்லூர் அருகே கரையை கடக்க உள்ள நிலையில் பழவேற்காட்டில் ஆக்ரோஷமாக கடல் சீற்றம் காணப்படுகிறது. சுமார் 6 அடி உயரம் வரை ஆக்ரோஷமாக கடல் கொந்தளிப்பதால் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை கரையில் கயிறு கட்டி வைத்துள்ளனர். மீன்பிடி  கலன்களை கரையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கூனங்குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரை ஆக்ரோஷமாக அலை எழும்பி வருகிறது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க ஆண்டார்மடம் மற்றும் திருப்பாலைவனம் பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரிடம் குறைகளை சொன்ன மீனவர்கள்

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சூழலில் கடலோரப் பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கான புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்து அவர்கள் கடலோர மீனவ  கிராமமான மிகவும் தாழ்வான பகுதியாக பார்க்கப்படும் கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது மீனவ கிராமத்திலிருந்து முகாமுக்கு வருமாறு அவர்களை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் ஒவ்வொரு மழை மற்றும் பெருவெள்ளம் வரும்போதெல்லாம் மட்டுமே அதிகாரிகள் அழைப்பதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை எனவும் கோரை குப்பம் கிராம மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

மாற்று இடம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மீனவ கிராமத்தில் இருக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பாக புயல் பாதுகாப்பு மையத்திற்கு வர வேண்டும் எனவும் அவர்கள் அறிவித்தனர்

மேலும், கருங்காலி பகுதியில் கடன் சீற்றம் ஏற்பட்டு அடிக்கடி சாலையை மணல் குவியல் சூழும் இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஆட்சியர் கவிதா முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா? தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளனவா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம்  பேசிய திருவள்ளூர் ஆட்சியர் கவிதா, முரசு புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், தாழ்வான பகுதியாக உள்ள கோரைக்குப்பம் மீனவ கிராம மக்களை புயல் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களும் அதனை பின்பற்றியுள்ளதாகவும்,யாரும் கடலுக்குச் செல்லவில்லை எனவும், கோரை குப்பம் மீனவர்களுக்கு மாற்று இடம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

சென்னை பீச் செல்வோருக்கு போலீசார் எச்சரிக்கை

முரசு புயல் காரணமாக சென்னை கடற்கரை பகுதிகளிலும் அதிக உயர்த்துடன் கடல் அலைகள் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடலோர பகுதிகளில் பாதுகாப்பான தூரத்தில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கடலில் இறங்கி குளித்தல், நீந்துதல் அல்லது வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடற்கரையில் அதிகாரிகள் மற்றும் உயிர்காப்பு பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks