6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்

6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
News Image

Tiruchendur KandaSashti Festival: திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவிற்காக வரலாறு காணாத ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக இந்துசமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா

தமிழ்க்கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த, கந்தசஷ்டி விரதம், வரும் நவம்பர் 10ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து நவம்பர் 15ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 16ம் தேதி முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவில் விரிவான மற்றும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, இந்து சமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின்படி, தமிழ்கடவுள் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருக்கோயில்களில் 2026 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவரித்துள்ளார்.

கந்தசஷ்டி விழா - 6 லட்சம் பேர் குவிய வாய்ப்பு

இதுதொடர்பான அறிக்கையில், “இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், 16 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முதல் ஐந்து நாட்களுக்கு தினம் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார தினத்தன்று சுமார் ஆறு லட்சம் பக்தர்களும், திருக்கல்யாணத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Hybrid SUV Discounts: ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்

பக்தர்களுக்காக கொட்டகைகள், கழிவறைகள், பேருந்துகள்

அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்ப சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக 11 இடங்களில் ஒரு லட்சத்து 1,02,673 சதுரடி பரப்பளவில் நிழற் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தங்கும் கொட்டகைகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை முழுமையாக நிறைவேற்றி தரப்படும். திருக்கோயில் வளாகத்திலுள்ள நிரந்தர கழிவறைகளுடன் 300 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கந்த சஷ்டி திருவிழா போது 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும், அறுசுவை உணவு வழங்கப்படவுள்ளது. திருக்கோயிலுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக திருக்கோயில் சார்பாக கட்டணமில்லா நான்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள்

திருக்கோயில் வளாகங்களில் குடிநீர் வழங்கிட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளது. பொது தரிசனம் மற்றும் முதியோர்கள் தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன. திருக்கோயில் கடற்கரையில் கடலில் நீராடும் பக்தர்களை கண்காணித்திட ஆறு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் மற்றும் 10,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 49 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு, மருத்துவ உதவி ஏற்பாடுகள்:

விழா நாட்களில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதோடு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தீ விபத்துகளை தடுத்திடும் வகையில் தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் திருக்கோயில் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். திருக்கோயில் சார்ந்த பாதுகாப்பு பணியில் வெளிமுகமையின் மூலம் சுமார் 789 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

26 இடங்களில் எல்.இ.டி., திரைகள்:

திருக்கோயில் கந்தசஷ்டி நிகழ்வுகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 26 இடங்களில் அமைக்கப்படுகின்றன. பக்தர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவும். விரைவாக தரிசனம் மேற்கொள்ளவும். தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால் பக்தர்களும் தங்கி விரதமிருக்கும் வகையில் புதிய சஷ்டி மண்டபம் இந்தாண்டு முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது” என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks