காங்கோவில் கட்டளைகளை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் எல்லைப்பகுதிகளில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற தாக்குதல்களின்போது, பணியில் இருந்து மாறுபட்டது மற்றும் தப்பி ஓடியதாக 71 இராணுவ வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 66 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் ஏனைய 4 வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

ஒரே நேரத்தில் 66 பேருக்கு விதிக்கப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி, பல்வேறு உலகநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்துள்ளன. உலகநாடுகள் மரண தண்டனைகளை படிப்படியாக விலக்கி வரும் நிலையில், காங்கோ மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மற்றும் தேசவிரோதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென ஏற்கனவே காங்கோ அரசு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article