4 ஆயிரம் பேர் சிறுநீர் எங்க வீட்டு வழியா போகுது! பசங்க சாப்பிட முடியல! தனியார் பள்ளியால் அவதிப்படும் தாய்

4 ஆயிரம் பேர் சிறுநீர் எங்க வீட்டு வழியா போகுது! பசங்க சாப்பிட முடியல! தனியார் பள்ளியால் அவதிப்படும் தாய்
News Image

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே தனியார் பள்ளியின் கழிவு நீரால் மிகவும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் பள்ளி பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தம்பாதெரு பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாணவர்களின் சிறுநீரை நேரடியாக கழிவு நீரின் கால்வாயில் பள்ளி நிர்வாகம் கலந்து விடுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் கூறிவந்த நிலையில் அதனைக் கேட்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி பேருந்து சிறை பிடித்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பிரேமா என்ற தாய், ”எனது பிள்ளைக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை பிக்ஸ் வருகிறது. இந்த நிலையில் நான்காயிரம் பள்ளி மாணவர்களின் இந்த சிறுநீர் துர்நாற்றம் தாங்க முடியவில்லை, ஒழுங்கா சாப்பிட கூட முடியவில்லை. எனவே இதனை சரி செய்ய வேண்டும்” என ஆதங்கமாக தெரிவித்தார்.

இதனை அறிந்த நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் குறித்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks