தனிஷ்க் நகை கடை கொள்ளை வழக்கு - முக்கிய நபரான நிஷாந்தை கைது செய்ய 4ஆவது நாளாக தேடும் காவல்துறை - நிஷாந்தை நெருங்கியதாக தகவல்.

நகைகள் கொள்ளை

மதுரை பைபாஸ்சாலை பகுதியில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரியில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞரின் தந்தை சுரேஷ் மற்றும் காதலியான இன்ஸ்டா இன்புளூயன்சர் மீனாட்சி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு 5 கிலோவிற்கு மேலான தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான நிஷாந்தை காவல்துறையின் பல்வேறு பகுதிகளிலும் 4ஆவது நாளாக தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்த பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்.

நிஷாந்த் பயன்படுத்திய செல்போன் நெட்வொர்க் மூலமாக நிஷாந்தை காவல்துறையினர் தேடுவதை அறிந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல். இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் நிஷாந்த தலைமறைவாகவுள்ள நிலையில் அவரை கைது செய்யப்பட்டால் மட்டுமே எத்தனை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும். இதன் காரணமாக நிஷாந்தை 9 தனிப்படையினரும் மதுரை மாவட்டம் முழுவதிலும் சேலம், கோவை, ஹைதரபாத், பெங்களூரு, கேரளா என பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேடுதல் பணி

இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்தை 4 நாட்களாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளியில் 2ஆவது நாளாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாடக்குளம் கண்மாய் மற்றும் காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்கள், கிணற்று பகுதிகளில் தேடி வருகின்றனர். நகை கொள்ளையடிக்க பட்ட தனிக்ஸ் நகை கடையில் தனியார் பாதுகாவலர் அதிகளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் நகைகளை பதுக்கி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் திருப்பரங்குன்றம், மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே நிஷாந்தின் செல்போன் அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Source: Read Full Article