ரத்த வெள்ளத்தில் 3 பேர்.. வேட்டியை மடித்து கட்டி.. சொந்த காரில் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய விஜயபாஸ்கர்!

ரத்த வெள்ளத்தில் 3 பேர்.. வேட்டியை மடித்து கட்டி.. சொந்த காரில் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய  விஜயபாஸ்கர்!
News Image

தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டையில் பல்வேறு அலுவல் பணிகளை முடித்துவிட்டு, தனது சொந்த தொகுதியான விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கார் அடப்பக்காரச் சத்திரம் அருகே சென்றபோது இரண்டு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுடன் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

விபத்து

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயபாஸ்கர் உடனே ஓட்டுநரிடம் சொல்லி காரை நிறுத்த சொன்னார். உடனே சற்றும் தாமதிக்காமல் வேட்டியை மடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றார். மருத்துவர் என்ற தனது கடமையை உணர்ந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அவர்களின் முகம் மற்றும் உடலில் இருந்த ரத்தத்தைத் தனது துண்டால் துடைத்து, உயிரை காப்பாற்றத் தேவையான உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார்.

விஜயபாஸ்கர் உதவி

இதில் எல்லையப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருந்ததால் ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் தனது சொந்த வாகனத்திலேயே அவரை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆரியூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார். இதுமட்டுமின்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விபத்தில் காயமடைந்த மூவருக்கும் எவ்விதத் தாமதமுமின்றி உரிய அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வைரலாகும் போட்டோஸ்

விபத்து நடைபெற்ற இடத்தில் போக்குவரத்தையும் சீர்செய்து, மருத்துவமனைக்குச் சென்ற தனது சொந்த வாகனம் திரும்பி வந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks