ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்!  ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
News Image

சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பான, சீரான மற்றும் சிரமமற்ற பயணத்தை ஏற்படுத்துவதற்கும்,  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள்:

பயணிகள் இரயில்களிலோ அல்லது இரயில் நிலைய வளாகங்களுக்குள்ளோ பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் இதர ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய பொருட்கள், குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களில் பெரும் தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் பயணிகள் மற்றும் இரயில்வே பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். சிறிய அளவிலான தீப்பொறிகூட பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி, கடுமையான காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும், இரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விதிமீறல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை:

பட்டாசுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தான பொருட்களை இரயில்களில் எடுத்துச் செல்வது, இரயில்வே சட்டம், 1989-ன் தொடர்புடைய பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் . மேலும், இத்தகைய விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது காயங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க நேரிடும்.

தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்:

தடை செய்யப்பட்ட மற்றும் அபாயகரமான பொருட்கள் இரயில்களில் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுத்து, அவற்றைக் கண்டறிவதற்காக வெடிபொருட்களைக் கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சிசிடிவி (CCTV) கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பயணிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மற்றும் சுவரொட்டிகள், மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சந்தேகத்திற்கிடமான உடைமைகள் அல்லது நடவடிக்கைகள் குறித்து இரயில்வே பாதுகாப்புப் படை (RPF), அரசு இரயில்வே காவல் (GRP), பயணச்சீட்டு பரிசோதகர்கள் அல்லது நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . மேலும், உதவிக்கு இரயில்வே பாதுகாப்பு உதவி எண் 139-ஐயும் தொடர்புகொள்ளலாம்.

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்:

பயணிகள் அனுமதிக்கப்பட்ட உடைமைகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீ விபத்து அபாயங்களைத் தடுப்பதற்கும், ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் பயணிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks