<p>தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக தொடரபட்ட வழக்கில் அதிமுக பிரமுகரும், மதுரை முன்னாள் துணை மேயருமான மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுக்கு எதிராக வாக்களிக்கக்கோரி தன்னிடம் ரூ.30 கோடி அளவுக்கு பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அதிமுக பிரமுகரும், மதுரை முன்னாள் துணை மேயருமான மன்னன் தன்னிடம் பேரம் பேசி அரசுக்கு எதிராக வாக்களிக்கக் கோரியதாக முஸ்தபா தரப்பில் மதுரை மாநகர் மத்தியக்குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக மன்னனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p>
Source: Read Full Article