மதுரையில் ரூ.2 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: ஆன்லைனில் விற்ற இருவர் கைது!

மதுரையில் ரூ.2 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: ஆன்லைனில் விற்ற இருவர் கைது!
News Image

மதுரையில் ஆன்லைன் மூலமாக மாத்திரைகளை வாங்கி ரூ. 2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இருவர் கைது - 52ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள்

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரவு, பகலாக போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை மேலூர் கருத்தபுளியம்பட்டியை சேர்ந்த சுகானந்தகணேஷ்(வயது 40), தூத்துக்குடி ஆறுமுகனேரியை சேர்ந்த ஜெயபாரதிராஜா(41) ஆகியோரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது 400 எண்ணிக்கையில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்

இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில், உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர், விளாச்சேரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ருபாய் மதிப்புள்ள 52 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

போதை மத்திரைகளின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும்

இதுகுறித்து துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நிருபர்களிடம் கூறுகையில்..," போதைக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்தநிலையில், மதுரையில் அதிக எண்ணிக்கையில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆன்லைன் மூலமாக மாத்திரைகள் வாங்கியதாக தெரிவித்தனர். யாரிடம் இருந்து வாங்கினார்கள், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவோம். இளைஞர்கள் அதிகம் போதைக்கு அடிமையாகின்றனர். அதனை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளை, கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஆகியோர் பாராட்டினர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மத்திரைகளின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks