ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
News Image

ரூ.2000 கோடி மதிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்கும் நிலையில், மாணாக்கர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும். திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் மடிக்கணினிகள் பெரிதும் உதவும். இதனைக் கருத்திற்கொண்டு, 2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி மடிக்கணினித் திட்டத்தை   ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனடைய உள்ள கல்லூரி மாணாக்கர்கள்

வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக். ஐ.டி.ஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) மாணாக்கர்கள் பயனடைய உள்ளனர்.

மேலும், முந்தைய 2025-2026 ஆம் கல்வியாண்டில் மடிக்கணினித் திட்டத்தில் பயனடையாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு (Professional Courses) மாணாக்கர்களும் தற்போதைய இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks