நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
News Image

பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நவ.18  முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

வண்டலூர் பூங்கா புதன்கிழமை மீண்டும் திறப்பு

நீர்வாழ் பறவைகளிடையே பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா சில நாட்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது. நீர்வாழ் பறவைகளிடையே எச்5 என்1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்படடிருந்தது.

பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு 15 நாட்கள் இடைவெளியில் இரு கட்டங்களாக பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 18-ஆம் தேதி புதன் கிழமை முதல் பூங்காவினுள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதத்தில் இதேபோன்று பறவைக்காய்ச்சல் எதிரொலியாக சில நாட்கள் பூங்கா மூடப்பட்ட நிலையில் பின்னர் கிருமிநாசினிகள் தெளித்தல், பறவைகளுக்கான நீர்த்தொட்டிகளை சுத்தப்படுத்துத்தல் உள்ளிட்ட தூய்மைப்பணிகள் நடைபெற்று பின்னரே பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அதனுள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks