"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!

"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
News Image

கரூரில் 1500 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் செருப்பு அணிந்து கோவில் வளாகத்திற்குள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் காவிரி ஆற்றில் படகு இல்லம் அமைப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

செருப்புடன் சென்ற அமைச்சர்

இதனைத் தொடர்ந்து, அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலின் ராஜகோபுரத்தைத் தாண்டி கோவில் வளாகத்திற்குள் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், எம்எல்ஏ ஆகியோர் செருப்பு அணிந்தபடி ஆய்வுப் பணியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமாரிடம், கோவில் புனரமைப்புப் பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ரமேஷிடம்

அதற்கு பதிலளித்த அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று கூறுவதற்குப் பதிலாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ரமேஷின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தனது பதிலில் துறை மற்றும் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டதில் குழப்பம் ஏற்பட்டது.

பழமையான கோவிலில் ஆய்வு மேற்கொண்டபோது செருப்பு அணிந்து சென்ற விவகாரமும், செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரின் பெயரை மாறி குறிப்பிட்டதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks