இருசக்கர வாகனத்தில் வந்து செய்த தந்திரம்! ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை!

இருசக்கர வாகனத்தில் வந்து செய்த தந்திரம்! ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை!
News Image

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே டாஸ்மாக் கடைகளில் வசூலிக்கப்பட்ட ரூ.1 கோடியே 50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் வசூலிக்கப் பயன்படுத்தப்பட்ட காருடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற நிலையில், பின்னர் படப்பை அருகே காரை நிறுத்திவிட்டு பணப்பெட்டியை எடுத்துச் சென்றுள்ளனர். ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்பி அரங்கேற்றப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

22 டாஸ்மாக் கடைகளில் வசூலிக்கப்பட்ட பணம்

திருவள்ளூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் பணம், வங்கி ஏஜெண்டுகள் மூலமாக வசூல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 10.11.2026 அன்று இரவு வங்கி ஏஜெண்ட் தாஸ் மற்றும் ஓட்டுநர் அபீப் ஆகியோர் வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அன்றைய தினம் மொத்தம் 22 டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்துவிட்டு, 23-வது கடையாக ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது வசூல் செய்யப்பட்ட பணம் காரில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இரவு சுமார் 9.40 மணியளவில் காசாளர் தாஸ் பணம் வசூலிப்பதற்காக கடைக்குள் சென்றுள்ளார். இதனால் ஓட்டுநர் அபீப் மட்டும் காரில் இருந்துள்ளார்.

ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்பிய மர்ம நபர்கள்

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரின் பின்புறத்தில் உரசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், காரின் சாவியை உள்ளேயே விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தச சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அங்கு காத்திருந்த மற்றொரு நபர், காரில் இருந்த பணப்பெட்டியுடன் ஸ்விஃப்ட் காரை ஓட்டிச் சென்றுள்ளார். திட்டமிட்டு ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்பி இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பை அருகே காரை நிறுத்திவிட்டு ரூ.1.50 கோடி கொள்ளை

காருடன் தப்பிச் சென்ற மர்ம நபர்கள், படப்பை அருகே உள்ள காரணிதாங்கல் பகுதியில் காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளனர். பின்னர் காரில் இருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்தப் பெட்டியில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் பணம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காரில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக காசாளர் தாஸ் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊழியர்கள் தாக்கப்படவில்லை; போலீசார் விளக்கம்

இந்தச் சம்பவத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், அது தவறான தகவல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களைத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும், ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்பி காரை எடுத்துச் சென்றதன் மூலமாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காசாளர் தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரகடம் காவல் நிலையத்தில் குற்ற எண் 407/2026-ன் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 303(2)-ன்படி கவனத்தைத் திசைதிருப்பி திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய போலீசார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற ஒரகடம் பகுதி முதல் கார் கைவிடப்பட்ட காரணிதாங்கல் பகுதி வரையிலான சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், காரை எடுத்துச் சென்ற நபர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொண்டு செல்லப்பட்ட வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1.50 கோடி போன்ற மிகப்பெரிய தொகை வசூல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், இந்தச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks