மதுரை விளக்குத்தூண் பகுதிக்கு குடும்பம், குடும்பமாக வருகை தந்து புத்தாடைகள், தீபாவளி பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வரும் மதுரை மக்கள். மக்கள் கூட்டத்தை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட காவல் தறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி இறுதி கட்ட பர்சேஸில் மக்கள்

மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மதுரையின் முக்கிய வணிகப் பகுதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வருகின்றனர். கடைகளில் மட்டுமின்றி சாலையோரக் கடைகளிலும் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கைப்பைகள், தலையணைகள், பாய்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கிச் செல்கின்றனர்.

நாளை தீபாவளி மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளிக்கு இன்னும் 1 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தீபாவளி பொருட்களை வாங்க மதுரை மாநகர் பகுதிகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்புப் பணிக்காகவும் 2

1000- மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒலிபெருக்கிகள் வாயிலாகவும் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

Source: Read Full Article