இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருப்பது போலவே மகளிர் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்துவதற்காக நடத்தப்படும் டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரும் மிகவும் பிரபலம் ஆகும். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் மும்பை, ஆர்சிபி ஆகிய அணிகள் மகளிர் பிரிமீயர் லீக்கிலும் பங்கேற்று வருகிறது.

ஆர்சிபி:

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ, அதேபோல மகளிர் பிரிமீயர் லீக்கிலும் ஆர்சிபி அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள டபுள்யூபிஎல் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி முக்கியமான வீராங்கனைகளை குறிவைத்து எடுத்து வருகிறது. அந்த வரிசையில் அவர்கள் தற்போது வரை 4 முக்கிய வீராங்கனைகளை எடுத்துள்ளது.

1. ஜேஸ் ஜோனசன்

2. தேஜல் ஹசப்னிஸ்

3. வ்ருந்தா தினேஷ்

4. க்ளோ ட்ரையான்

ஜேஸ் ஜோனசன்:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேஸ் ஜோனசனை ரூபாய் 40 லட்சம் கொடுத்து ஆர்சிபி வாங்கியுள்ளது. இவர் 2012, 2014, 2018, 2022 மற்றும் 2023ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தவர். 2022ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணியிலும் ஆடியவர். காமன்வெல்த் தொடரில் 2022ம் ஆண்டு தங்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் ஆடியுள்ளார்.

ஆஸ்திரேலியா டி20 லீக்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சுழற்பந்து வீராங்கனை என்ற பெருமையையும் 96 விக்கெட்டுகளுடன் தன்வசம் வைத்துள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சாளர் மற்றும் இடது கை பேட்டிங் செய்யும் ஆற்றல் கொண்டவர்.

தேஜல் ஹப்னிஸ்:

இந்தியாவைச் சேர்ந்த தேஜல் ஹசப்னிசை ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். இவர் வலது கை பேட்டிங் மற்றும் வலது கை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்தவர். இறுதிப்போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான விருது வாங்கியவர்.

வ்ருந்தா தினேஷ்:

மற்றொரு இந்திய வீராங்கனையான வ்ருந்தா தினேஷை ரூபாய் 10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். வ்ருந்தா சிறந்த அதிரடி பேட்டிங் ஆற்றல் கொண்டவர். 2023 மற்றும் 2026ம் ஆணடு மகளிர் ஆசிய கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்தவர். 2022 - 23ம் ஆண்டு நடந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 477 ரன்கள் எடுத்தவர். அந்த தொடரில் அவர் 47.70 சராசரியாக வைத்திருந்தார்.

க்ளோ ட்ரையான்:

ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ள மற்றொரு வெளிநாட்டு வீராங்கனை க்ளோ ட்ரையான். வலது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சாளராகவும் அசத்தும் ஆற்றல் கொண்டவர். இவரை ரூபாய் 30 லட்சத்திற்கு ஆர்சிபி ஏலத்தில் எடுத்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

Source: Read Full Article